Raghuram Rajan:இந்தியப் பொருளாதாரத்துக்கு அடுத்த ஆண்டு கடினமானதாக இருக்கும்: ரகுராம் ராஜன் கணிப்பு

By Pothy RajFirst Published Dec 15, 2022, 12:40 PM IST
Highlights

இந்தியப் பொருளாதாரத்துக்கு அடுத்த ஆண்டு மிகக் கடினமானதாக இருக்கும். இந்தியாவுக்கும் மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் சிரமமானதாக அமையும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்

இந்தியப் பொருளாதாரத்துக்கு அடுத்த ஆண்டு மிகக் கடினமானதாக இருக்கும். இந்தியாவுக்கும் மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் சிரமமானதாக அமையும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்

ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று பங்கேற்றார். ராகுல் காந்தியின் நடைபயணம் தற்போது ராஜஸ்தானில் செல்கிறது. ராஜஸ்தானின் சவாஸ் மதாபோரூரில் இருந்து ராகுல் காந்தியுடன் நடந்து சென்ற ரகுராம் ராஜன், பத்சாபூராவரை சென்றார்

ராகுலுடன் கைகோர்த்த ரகுராம் ராஜன்!பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று நடந்தார்

இதற்கிடையே ராகுல் காந்தியுடன், பல்வேறு விஷயங்கள் குறித்து ரகுராம் ராஜன் நடந்துகொண்டே பேசினார். அது குறித்து ரகுராம் ராஜன் கூறியதாவது:

இந்தியப் பொருளாதாரத்துக்கு மட்டுமல்ல உலகின்பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்துக்கும் அடுத்த ஆண்டு கடினமானதாக இருக்கும். வளர்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களை செய்ய முடியாமல் தோல்வி அடையும்.

கொரோனாவில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட கீழ்நடுத்தரக் குடும்பத்தினர் நலனை மனதில் வைத்து மத்திய அரசு கொள்கைகளை உருவாக்கவேண்டும். சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நடத்த ஏதுவான சூழலை உருவாக்கவேண்டும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கு ஊக்கமளிக்க வேண்டும்.

எல்லை மோதல்: இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு: சீனாவுக்கு கடும் எச்சரிக்கை

இந்தியாவில் அடுத்த புரட்சி என்பது சேவைத்துறையில்தான் நடக்கும் என்று ராகுல் காந்தியிடம் தெரிவித்தேன். காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் கூறுகையில், 4 முதல் 5 தொழிலதிபர்கள், கோடீஸ்வர்கள்தான் பணக்காரர்களாகி வருகிறார்கள், தேசமே அவர்கள் பின்னால் இருக்கிறது. 

குறிப்பிட்ட தொழிலதிபர்கள் சேர்ந்து தனியாக இந்துஸ்தானை உருவாக்குகிறார்கள். விவசாயிகள் மற்றவர்கள் சேர்ந்து தனியாக இந்துஸ்தானை உருவாக்குகிறார்கள் என்றனர். இது உண்மையிலேயே மிகப்பெரிய பிரச்சினை. ஆனால் முதலாளித்துவத்தைப் பற்றியது அல்ல.

கொரோனா காலத்தில் உயர்நடுத்தரக் குடும்பத்தினரின் வருமானம் உயர்ந்துள்ளது. ஏனென்றால், வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்பதால் வருமானம்  அதிகரித்தது. ஆனால், கொரோனா காலத்தில் தொழிற்சாலைக்கு சென்று பணியாற்றுவோர் வருமானம் குறைந்தது. 

தடம் பதிக்கும் மோடி அரசு !கம்போடியாவில் அங்கோர் வாட் கோயிலை புதுப்பிக்கும் இந்திய அரசு

ஆதலால் கொரோனா காலத்தில் வேறுபாடு அதிகரித்துள்ளது. பணக்காரர்களுக்கு பிரச்சினையில்லை. அடித்தட்டு மக்களுக்கு ரேஷன் பொருட்கள், உள்ளிட்டவை கிடைத்துவிட்டன. ஆனால், கீழ் நடுத்தரக் குடும்பத்தினருக்குதான் அதிக பாதிப்பு ஏற்பட்டது. வேலையில்லை, வேலையின்மை அதிகரித்தது. கொள்கைகளை வகுப்போர் இந்த வகுப்பினரை கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்

click me!