Share Market Today: பங்குச்சந்தையில் மீண்டும் சரிவு! என்ன காரணம்? சென்செக்ஸ் 250 புள்ளிகள் வீழ்ச்சி

By Pothy RajFirst Published Dec 15, 2022, 9:47 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை 2 நாட்கள் உயர்வுக்குப்பின் இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி அடைந்தது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை 2 நாட்கள் உயர்வுக்குப்பின் இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி அடைந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைளை எடுக்கப் போகிறது, வட்டிவீதத்தை எவ்வாறு உயர்த்தப்போகிறது என்பது முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பைப் போல் 50 புள்ளிகளை அமெரி்க்க பெடரல் ரிசர்வ் நேற்று உயர்த்தியது. அதேசமயம், பணவீக்கத்தை 2 சதவீதம் வரை குறைக்கும் வரை வட்டிவீதம் உயர்த்தப்படும் என்று சூசகமாகத் தெரிவித்தது. இதனால் அடுத்துவரும் பெடரல் ரிசர்வ் கூட்டத்திலும் வட்டிவீத உயர்வு இருக்கும் என்பது தெரிந்தது.

இதுதவிர இங்கிலாந்து தலைமை வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் வங்கியும் இன்று வட்டிவீதம் உயர்வு குறித்து முடிவுகளை எடுக்க உள்ளன. இந்தக் காரணங்களால், முதலீட்டாளர்கள் பெரும் அச்சமடைந்து, முதலீடு செய்வதைக் குறைத்து பங்குகளை விற்று லாபநோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

பங்குச்சந்தை தொடர் உயர்வு! காரணம் என்ன சென்செக்ஸ்,நிப்டி ஏற்றம்: லாபத்தில் வங்கி பங்கு

இதனால் வர்த்தகம் தொடங்கும் முன்பே மும்பை பங்குச்சந்தையில் 80 புள்ளிகள் குறைந்தது. வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 266 புள்ளிகள் சரிந்து, 62,411 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 76 புள்ளிகள் குறைந்து, 18,585 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில், 14 நிறுவனங்களின் பங்குகள் லாபத்திலும், 16 நிறுவனங்களின் பங்குகள் இழப்பிலும் உள்ளன.

 என்டிபிசி, இன்டஸ்இன்ட் வங்கி, சன்பார்மா, கோடக்மகிந்திரா, டாக்டர்ரெட்டீஸ், மாருதி, லார்சன் அன்ட் டூப்ரோ, ஐடிசி, பவர்கிரிட், மகிந்திரா அனஅட் மகிந்திரா, டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய பங்குகள் லாபத்தில் உள்ளன.

பங்குச்சந்தையில் காளை நடமாட்டம்: முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு! சென்செக்ஸ், நிப்டி உயர்வு

நிப்டியில், என்டிபிசி, எஸ்பிஐ காப்பீடு, பிரிட்டானியா இன்ட்ஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் வங்கி, ஓஎன்ஜிசி பங்குகள் விலை உயர்ந்துள்ளன. டெக் மகிந்திரா, இன்பேசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குள் விலை குறைந்துள்ளன

நிப்டியில், பொதுத்துறை வங்கி, மருந்துத்துறை, நிதிச்சேவை, தனியார்வங்கித்துறை பங்குகள் லாபத்தில் உள்ளன. உலோகம், தகவல் தொழில்நுட்பம், எப்எம்சிஜி துறைப் பங்குகள் சரிவில் உள்ளன

click me!