தங்கம் விலை கடந்த 2 நாட்களாக சரிந்த நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்து, சவரன் ரூ.41ஆயிரத்தை நெருங்கியுள்ளது.இது நடுத்தரக் குடும்பத்து மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த 3 நாட்களாக சரிந்த நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்து, சவரன் ரூ.41ஆயிரத்தை நெருங்கியுள்ளது.இது நடுத்தரக் குடும்பத்து மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாயும், சவரனுக்கு 480 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. 3 நாட்களில் சேர்த்து 320 ரூபாய் சவரனுக்கு குறைந்த நிலையில் இன்று ஒரேநாளில் ரூ.480 அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,040ஆகவும், சவரன், ரூ.40,320ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூ.5,100 ஆகவும், சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 800ஆக அதிகரித்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,100க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கொஞ்சூண்டு குறைவு ! இதெல்லாம் போதாது! இன்றைய நிலவரம் என்ன?
தங்கத்தின் விலை கடந்த 3நாட்களாக குறைந்தபோதிலும் இன்று ஒரேநாள் விலை உயர்வு நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகை வாங்க நினைப்போருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தங்கம் விலை சவரன் ரூ.41ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
அமெரிக்காவில் பெடரல் வங்கி வட்டிவீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியுள்ளது, அதேநேரம், அடுத்து வரும் கூட்டத்திலும் வட்டிவீத உயர்வு இருக்கும், பணவீக்கம் கட்டுக்குள் வரும்வரை இந்த நடவடிக்கை தொடரும் என சூசகமாகத் தெரிவித்தது. இதனால் ஆசியச் சந்தைகள், இந்தியச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
தங்கம் விலை மளமளவென சரிந்தது ! மிடில் கிளாஸ் மக்களுக்கு ஹேப்பி! இன்றைய நிலவரம் என்ன?
இந்நிலையில் முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் மீது திரும்பியிருப்பதால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. விலையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சவரனுக்கு 480 விலை ஒரே நாளில் அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, ரூ.74.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து, ரூ.74,000 ஆக ஏற்றம் கண்டுள்ளது