Gold Silver Price Today: கொஞ்சூண்டு குறைந்த தங்கம் விலை! இதெல்லாம் ஆறுதல் தருமா? இன்றைய நிலவரம் என்ன

By Pothy RajFirst Published Jan 21, 2023, 10:25 AM IST
Highlights

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தநிலையில்  இன்று சற்று குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நடுத்தரக் குடும்பத்தினருக்கும் எந்த விதத்திலும் ஆறுதல் அளிக்காது. 

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தநிலையில்  இன்று சற்று குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நடுத்தரக் குடும்பத்தினருக்கும் எந்த விதத்திலும் ஆறுதல் அளிக்காது. 

தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் விலை குறைந்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,325ஆகவும், சவரன், ரூ.42,600ஆகவும் இருந்தது.

வெச்சு செய்யும் தங்கம் விலை! மிடில் கிளாஸுக்கு ஷாக்: இன்றைய நிலவரம் என்ன

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து ரூ.5,320ஆகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.42 ஆயிரத்து 560 ஆக குறைந்துள்ளதுகோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,320க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை வீழ்ச்சி!மிரட்டும் தங்கம்!நிலவரம் என்ன ?

தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்கள் குறைந்து நிலையில் நேற்று அதிரடியாக கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்தது. இதுவரைஇல்லாத அளவாக சவரன் ரூ.42,600க்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்தது நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகைப்பிரியர்களுக்கும் பெரிய ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமையாது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை கிராம் ரூ.5317 ஆக இருந்தநிலையில் இன்று ரூ.5320ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.5,325 வரை உயர்ந்தாலும், பின்னர் சரிந்தது. இந்த வாரத்தில் தங்கத்தின் விலையில் கிராமுக்கு 8 ரூபாய் அளவில்தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.50ஆக இருந்தநிலையில் 20 பைசா குறைந்து ரூ.74.30ஆகவும்,  கிலோவுக்கு ரூ.200 சரிந்து ரூ.74 ஆயிரத்து 300ஆகவும் குறைந்துள்ளது.


 

click me!