தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக இன்றும் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.136 விலை ஏற்றம் கண்டுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக இன்றும் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.136 விலை ஏற்றம் கண்டுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 17 ரூபாயும், சவரனுக்கு 136 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்ழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,191ஆகவும், சவரன், ரூ.41,528ஆகவும் இருந்தது.
தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வு! இன்றைய(3/01/2023) நிலவரம் என்ன
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து ரூ.5,208ஆகவும், சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 664ஆக ஏற்றம் கண்டுள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,208க்கு விற்கப்படுகிறது.
எகிறியது தங்கம் விலை ! மிடில் கிளாஸ் மக்களுக்கு அதிர்ச்சி! இன்றைய(2/01/2023) நிலவரம்
அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அந்நாட்டு தலைமை வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டிவீதம் உயர்வு குறித்து இன்று ஆலோசிக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்துக்குப்பின் தங்கம் விலையில் மாற்றம் வரக்கூடும். வட்டிவீதம் அதிகரிக்கும்பட்சத்தில் தங்கத்தின் மீதான முதலீடு ஆர்வம் குறைந்து பங்குப்பத்திரங்களில் முதலீடு அதிகரிக்கலாம்.
இருப்பினும், பண்டிகைக்காலத்தையொட்டியும், பாதுகாப்பான முதலீடு கருதியும், தங்கத்தின் மீது முதலீடு மோகம் அதிகரித்து வருவதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் ஏறக்குறைய 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000க்கு மேல் உயர்ந்துள்ளது, தங்கத்தை சிறுகச் சிறுகச் சேர்க்கும் எண்ணத்தில் இருக்கும் மிடில்கிளாக் மக்களுக்கும், நகை வாங்க நினைப்போருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலையில் இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 50 காசு குறைந்து, ரூ.75.00ஆக சரிந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 சரிந்து, ரூ.75,000 ஆக குறைந்துள்ளது.