Share Market Live Today: பங்குச்சந்தையில் சரிவு: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி: என்ன காரணம்?

By Pothy RajFirst Published Jan 4, 2023, 9:42 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன, காலையிலிருந்தே ஊசலாட்டமான போக்கு காணப்படுகிறது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன, காலையிலிருந்தே ஊசலாட்டமான போக்கு காணப்படுகிறது.

சரிவுக்கு காரணம் என்ன

அமெரிக்கப் பங்குச்சந்தை விடுமுறைக்குப்பின் நேற்று தொடங்கி, சரிவுடன் முடிந்தது. அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும்வரை வட்டிவீதத்தை உயர்த்துவோம் என்று பெடரல் ரிசர்வ் தெரிவித்துள்ளது.

சரிவுடன் தொடங்கியது பங்குச்சந்தை: நிப்டி, சென்செக்ஸ் வீழ்ச்சி: ஜோமேட்டோவுக்கு அடி

இன்று இரவு பெடரல் ரிசர்வ் கூட்டம் நடக்கிறது, இதில் வட்டிவீதம் உயர்த்தப்படுவது குறித்த அறிவிப்பு வரலாம் என்பதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் முதலீட்டைக் கையாண்டனர்.

அதற்கு ஏற்றார்போல், அமெரி்க்க பங்குப்பத்திரங்களும் வலுவடைந்து, டாலர் மதிப்பு அதிகரித்ததால், வட்டிவீதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களுக்கு நிலவியது. இதையடுத்து, பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவை எதிர்பார்த்து எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதால், சரிவும், ஊசலாட்டமும் காணப்படுகிறது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தலாம் என்று எண்ணி அந்நிய முதலீட்டாளர்கல் ரூ.628 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனர், ஆனால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.350 கோடிக்கு மட்டுமே  பங்குகளை வாங்கியுள்ளனர்

2023ம் ஆண்டின் முதல் நாளே பங்குச்சந்தையில் உற்சாகம்! சென்செக்ஸ்,நிப்டி புள்ளிகள் ஜோர்!

மும்பை பங்குச்சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் முன்பே 58 புள்ளிகள் சரிந்தது. வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் சரிந்து, 61,051 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 69 புள்ளிகள் சரிவுடன் 18,163புள்ளிகளில் வர்த்தகம் செய்கிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 நிறுவனங்களின் பங்குகளில், 13 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், மற்ற 17 நிறுவனப் பங்குகள் சரிவிலும் உள்ளன. இன்டஸ்இன்ட் வங்கி, சன்பார்மா, பஜாஜ்பைனான்ஸ், ஏசியன்பெயின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, நெஸ்ட்லே இந்தியா, மகிந்திரா அன்ட் மகிந்திரா, என்டிபிசி, ஏர்டெல், ஐடிசி நிறுவனப் பங்குகள் லாபத்தில் உள்ளன.

உற்சாகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்: டாடா ஸ்டீல் பங்கு லாபம்

நிப்டியில் இன்டஸ்இன்ட் வங்கி, சன்பார்மா, பிரிட்டானியா, பிபிசிஎல், ஏசியன்பெயின்ட்ஸ் பங்குகள் லாபத்தோடு நகர்கின்றன. ஹின்டால்கோ, ஓஎன்ஜிசி, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், பவர்கிரிட் கார்ப்பரேஷன், எஸ்பிஐ காப்பீடு பங்குகள் சரிந்துள்ளன

நிப்டியில் வங்கி, நிதிச்சேவை, மருந்துத்துறை, பொதுத்துறை வங்கிகள் ஆகிய துறைப் பங்குகள்தான் லாபத்தில் உள்ளன. ரியல்எஸ்டேட், உலோகம், தகவல்தொழில்நுட்பம், ஊடகம், ஆட்டோமொபைல், எப்எம்சிஜி துறைப்பங்குகள் சரிவில் உள்ளன.

click me!