Share Market Today Price: சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி உயர்வு:ஐடி, வங்கி பங்கு லாபம்

By Pothy RajFirst Published Jan 3, 2023, 4:04 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் சரிவுடன் காலையில் வர்த்தகத்தைத் தொடங்கி மாலையில் ஏற்றத்துடன் முடிந்தன. தகவல்தொழில்நுட்பம், வங்கி, மற்றும் மருந்துத்துறை பங்குகள் லாபமடைந்தன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் சரிவுடன் காலையில் வர்த்தகத்தைத் தொடங்கி மாலையில் ஏற்றத்துடன் முடிந்தன. தகவல்தொழில்நுட்பம், வங்கி, மற்றும் மருந்துத்துறை பங்குகள் லாபமடைந்தன.

அமெரிக்கப் பங்குச்சந்தை நேற்று விடுமுறை என்பதால், அங்கு அடுத்து என்ன நிலவரம் என்பதை தெரியாமல் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் இருந்தவாறே இன்று காலை வர்த்தகத்தை தொடங்கினர்.

2.6 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து சாதனை புரிந்த மாருதி சுசுகி

இதனால் சந்தையில் காலையில் இருந்தே ஊசலாட்டம் நிலவியதால் ஏற்ற இறக்கம் இருந்தது.
இதனால் முதலீட்டில் ஆர்வம் செலுத்தாமல் கவனத்துடன் வர்த்தகத்தை காலை முதல் கையாள்கிறார்கள்.

இதனால் வர்த்தகம் தொடங்கும் முன்பே பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது. ஆனால், 3ம் காலாண்டுமுடிவுகள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியதால், நம்பிக்கையடைந்த முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கினர்.

இந்த உற்சாகமான போக்கால் பங்குச்சந்தை சரிவிலிருந்து மீண்டு ஏற்றத்தை நோக்கி நகர்ந்தது. வங்கிப்பங்குகளுக்கு அதிகமான கிராக்கி இருந்ததால், வங்கித்துறை பங்குகள் நல்ல லாபம் அடைந்தன.

சரிவுடன் தொடங்கியது பங்குச்சந்தை: நிப்டி, சென்செக்ஸ் வீழ்ச்சி: ஜோமேட்டோவுக்கு அடி

பிற்பகலுக்குப்பின் சந்தையில் ஏற்றமான போக்கு நிலைத்ததால், மாலை வர்த்தகம் உயர்வுடன் முடிந்தது.
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 126 புள்ளிகள் உயர்ந்து 61,294 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 35புள்ளிகள் குறைந்து, 18,232 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில் 17 நிறுவனங்களின் பங்குகள் மட்டும் லாபமடைந்தன, மற்ற நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன. ஏசியன்பெயின்ட்ஸ், டைட்டன், டிசிஎஸ், டெக்மகிந்திரா, சன்பார்மா, விப்ரோ, இன்டஸ்இன்ட் வங்கி, நெஸ்ட்லே இந்தியா, ஹெட்டிஎப்சி ட்வின்ஸ், பார்தி ஏர்டெல், ஹெசிஎல் டெக், பவர்கிரிட் ஆகிய நிறுவனப் பங்குகள் லாபமடைந்தன.
நிப்டியில் மருந்துத்துறை, தகவல்தொழில்நுட்பம், வங்கித்துறை பங்குகள் 0.5 சதவீதம் உயர்ந்தன. உலோகத்துறை பங்குகள் சரிந்தன.

2023ம் ஆண்டின் முதல் நாளே பங்குச்சந்தையில் உற்சாகம்! சென்செக்ஸ்,நிப்டி புள்ளிகள் ஜோர்!

நிப்டியில் ஹெச்டிஎப்சி லைப், எஸ்பிஐ காப்பீடு, ஆக்சிஸ் வங்கி, டைட்டன், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபமடைந்தன. ஹின்டால்கோ, பிரிட்டானியா, மகிந்திரா அன்ட்மகிந்திரா, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், கிராஸிம் நிறுவனப் பங்குகள் மதிப்பு சரிந்தது. 
 

click me!