IMF: Recession:உலகில் மூன்றில் ஒருபகுதி நாடுகள் 2023-ல் பொருளாதார மந்தநிலையைச் சந்திக்கும்: ஐஎம்எப் எச்சரிக்கை

By Pothy RajFirst Published Jan 3, 2023, 2:59 PM IST
Highlights

உலகில் மூன்றில் ஒருபகுதி நாடுகள் 2023ம் ஆண்டில் பொருளாதார மந்தநிலையைச் சந்திக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா எச்சரித்துள்ளார்.

உலகில் மூன்றில் ஒருபகுதி நாடுகள் 2023ம் ஆண்டில் பொருளாதார மந்தநிலையைச் சந்திக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்று, ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, குறிப்பாக அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 2023ம் ஆண்டு மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என ஐஎம்எப் எச்சரித்துள்ளது.

சர்வதேச செலாவணி நிதியும் உலகப் பொருளாதாரத்தை கணித்துக் கூறுவது இது முதல்முறைஅல்ல,கடந்த ஆண்டுஅக்டோபர் மாதமும் இதேபோல் எச்சரித்திருந்தனர். 
 “பேஸ் தி நேஷன்” என்ற சிபிஎஸ் செய்தி நிகழ்ச்சிக்கு சர்வதேச செலாவணி நிதியத்தின்(IMF) இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா அளித்த பேட்டியில் கூறியதாவது: 

ஜோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் குஞ்சன் பட்டிதார் திடீர் விலகல்:பங்கு விலை சரிவு

உக்ரைன், ரஷ்யா இடையே முடியாமல் தொடர்ந்து வரும்போர், சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் ஆகியவை 2023ம் ஆண்டில் பொருளாதாரத்தைப் பாதிக்கும். 

2023ம் ஆண்டில் உலக நாடுகளில் மூன்றில் ஒருபகுதி நாடுகள், பொருளாதார மந்தநிலையில் பாதிக்கப்படும். நாடுகளில் பொருளாதார மந்தநிலை இல்லாவிட்டாலும்கூட, லட்சக்கணக்கான மக்கள், பொருளாதார மந்தநிலையை உணர்வார்கள். தொடர்ந்து நடக்கும் போர், மோசமான வைரஸ் பரவல் போன்றவை உலக நாடுகளை பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளிவிடும்.

உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவில் பொருளாதார வளர்ச்சி இருக்கும் இருப்பினும் அது உலக சாராசரிக்கும் குறைவாகவே இருக்கும். 

16 மாதங்களில் இல்லாதது! டிசம்பரில் வேலையின்மை 8.30 சதவீதமாக அதிகரிப்பு: சிஎம்ஐஇ தகவல்

நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி இலக்கை சீனா அடைந்தால், கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக, பெய்ஜிங்கின் வளர்ச்சி விகிதம் வழக்கமான போக்கைக் காட்டிலும் குறையும்.சீனாவில் பொருளாதார சீர்குலைவு ஏற்படுவதற்கு அதிபர் ஜி ஜின்பிங் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியதுதான் முக்கியமான காரணமாக இருக்க முடியும்.

அடுத்த 2 மாதங்கள் சீனாவுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும், சீனாவின் வளர்ச்சியைப் பாதித்து அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மைனஸில் கொண்டு செல்லும், சீனாவின் தாக்கம் ஆசியப் பிராந்தியத்திலும் உலகிலும் எதிரொலித்து அங்கும் எதிர்மறையான போக்கு வரும்.

கடந்த 2021ம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 6 சதவீதத்தில் இருந்து, 2022ம் ஆண்டில் 3.2 சதவீதமாகக் குறைந்துவிட்டது. 2023ம் ஆண்டில் இது 2.7 சததவீதமாகமேலும் குறையும். கடந்த 2001ம் ஆண்டுக்குப்பின் உலகப் பொருளாதாரம் வளர்ச்சி மிகவும் பலவீனமாக இருப்பது இதுதான் முதல்முறை

இவ்வாறு கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்தார்


 

click me!