Gunjan Patidar Zomato: ஜோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் குஞ்சன் பட்டிதார் திடீர் விலகல்:பங்கு விலை சரிவு

Published : Jan 03, 2023, 10:55 AM IST
Gunjan Patidar Zomato: ஜோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் குஞ்சன் பட்டிதார் திடீர் விலகல்:பங்கு விலை சரிவு

சுருக்கம்

ஆன்லைனில் ஆர்டர் எடுத்து உணவுப் பொருட்களை சப்ளை செய்யும் ஜோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியான குஞ்சன் பட்டிதீர் அந்த நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

ஆன்லைனில் ஆர்டர் எடுத்து உணவுப் பொருட்களை சப்ளை செய்யும் ஜோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியான குஞ்சன் பட்டிதீர் அந்த நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

ஜோமேட்டோ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளில் இருந்து தொடர்ந்து மூத்த அதிகாரிகள் விலகி வருகிறார்கள். இதனால் பங்குச்சந்தையில் காலை வர்த்தகத்திலேயே ஜோமேட்டோ பங்கு மதிப்பு 2 சதவீதம் குறைந்துள்ளது

தீர்ப்பை மாற்றிச் சொல்லாதீங்க!பணமதிப்பிழப்பு பற்றி காங்கிரஸ் கருத்து

ஜோமேட்டோ நிறுவனம் சில ஊழியர்களுடன் தொடங்கும்போது அப்போது நிறுவனத்தில் இணைந்தவர் குஞ்சன் பட்டிதார். ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோமேட்டோவில் பணியாற்றிய பட்டிதார், தொழில்நுட்பத்துறையை புதிதாக உருவாக்கி கட்டமைத்தார். 

ஜோமேட்டோ நிறுவனமும் பங்குச்சந்தையில் தெரிவித்த அறிக்கையில் “ ஜோமேட்டோ நிறுவனத்தின் இணைநிறுவனர் குஞ்சன் பட்டிதார், தலைமை தொழில்நுட்ப பொறுப்பில் இருந்து விலகிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளது

ஜோமேட்டோவின் இணை நிறுவனரான மோகித் குப்தா சமீபத்தில் விலகியதற்கு பின், இப்போது குஞ்சன்  பட்டிதார்ராஜினாமா செய்துள்ளார். ஜோமேட்டோவின் புதிய முயறச்சிகளுக்கான தலைவரும், உணவு சப்ளை பிரிவுத் தலைவருமான ராகுல் கஞ்சு,சித்தார்த் ஜாவர் ஆகியோரும் சமீபத்தில் அந்தநிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு நவம்பரில் விலகினர். 

ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்பாரா? பணமதிப்பிழப்பு தீர்ப்பு பற்றி பாஜக கருத்து

ஜோமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர்களில் 4வது நிறுவனர் குஞ்சன் பட்டிதாரும் விலகியுள்ளார். இதுவரை பங்கஜ் சத்தா, கவுரவ் குப்தா, மோகித் குப்தா ஆகிய இணை நிறுவனர்களும் விலகிவிட்டனர். இதில் பங்கஜ் சத்தா 2018ம் ஆண்டிலிரும், கவுரவ் குப்தா 2021லும் விலகினர்

ஜோமேட்டோ நிறுவனத்தில் இருந்து குஞ்சன் பட்டிதார் விலகிய செய்தி அறிந்ததும், பங்குச்சந்தையில் ஜோமேட்டோ பங்கு விலை கடுமையான சரிவைச்சந்தித்தது. ஜோமேட்டோ பங்கு விலை காலை வர்த்தகத்தில் 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. 

கடந்த ஆண்டிலும் ஜோமேட்டோ பங்குகள் சரிவர பங்குச்சந்தையில் செயல்படவில்லை. கடந்த ஆண்டில் மட்டும் ஜோமேட்டோ பங்கு மதிப்பு 50 சதவீதம் சரிந்தது. ஒரு கட்டத்தில் ஒரு பங்கு ரூ.162 ஆக இருந்தநிலையில் தற்போது ரூ.60 ஆகக் குறைந்துவிட்டது

நடப்பு நிதியாண்டில் ஜோமேட்டோ நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.250.80 கோடியாகும். கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.434.90 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வருவாய் 62 சதவீதம் உயர்ந்து ரூ.1,661.30 கோடியாக உள்ளது.  

ரத்தன் டாடாவின் தீவிர விஸ்வாசி ஆர்கே. கிருஷ்ணகுமார் மாரடைப்பால் காலமானார்

ஜோமேட்டோ நிறுவனத்தின் உணவுடெலிவரி வர்த்தக வளர்ச்சி குறைந்துவிட்டது. 2வது காலாண்டில் விற்பனை 22 சதவீதம் அதிகரித்து, ரூ.6,631 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் 2வது காலாண்டில் ரூ.5410 கோடியாக இருந்தது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு