தங்கம் விலை கடந்த 3 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 3 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 5ரூபாயும், சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,840 ஆகவும், சவரன், ரூ.38,720 ஆகவும் இருந்தது.
மக்களே தங்கம் இப்போது வாங்கலாமா..? சற்று விலை உயர்வு.. இன்றைய விலை நிலவரம்..
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 5ரூபாய் சரிந்து, ரூ.4,835ஆக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.38,680ஆக நிலை கொண்டுள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,835ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை கிடுகிடு உயர்வு! மீண்டும் 38,000 ரூபாய்: வெள்ளி விர்ர்.. இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,040 அதிகரித்த நிலையில் இன்று 40 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை குறைந்து வந்தது நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் ஓரளவு மகிழ்ச்சியை அளித்தது. தங்கத்தை ஆர்வத்துடன் வாங்கினர். அவ்வப்போது விலை உயர்ந்தாலும் தங்கம் விலை பெரிதாக மாறவில்லை.
பிச்சுகிட்டு போகுது! தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.1000க்கு மேல் உயர்வு: இன்றைய நிலவரம்?
இந்நிலையில் தங்கம் விலை வாரம் தொடங்கியதிலிருந்தே உயரத் தொடங்கி சவரன் ரூ.38ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது. கடந்த 4 நாட்களுக்குப்பின் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராம் ரூ.66.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.65,500 ஆகவும் விற்கப்படுகிறது