
இபிஎப்ஓ அமைப்பில் கடந்த மே மாதத்தில் மட்டும் புதிதாக 16.80 லட்சம் பேர் இணைந்துள்ளர். கடந்த ஆண்டு இதே மே மாதத்தைவிட 83 சதவீதம் வளர்ச்சிஅடைந்துள்ளது என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டு மே மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் நிகர சந்தாதாரர்கள் எண்ணிக்கை 7.60 லட்சம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக மே மாதத்தில் மட்டும் 16.80 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். 9.60 லட்சம் பேருக்கு இபிஎப் வசதி கிடைத்து வருகிறது.
தொழிலாளர் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள்படி 7.21 லட்சம் சந்தாதாரர்கள் விலகி, பின்னர் வேறு பணிக்கு மாறி மீண்டும் இபிஎப்ஓ திட்டத்துக்குள் வந்துவிட்டனர். இவர்கள் தொடர்ந்து இபிஎப் திட்டத்தில்இணைந்துள்ளனர்.
இந்தியாவின் மாம்பழ மனிதர் கலீம் உல்லா கான் ! ஒரே மாமரத்தில் 300 வகை மாம்பழங்கள்
கடந்த ஆண்டு இபிஎப் அமைப்பில் இணைந்த சராசரியைவிட, இந்த ஆண்டு மே மாதத்தில் புதிதாக இணைந்ததுதான் அதிகபட்ச சராசரியாகும்.
வயதின்அடிப்படையில் பார்த்தால், 22 முதல் 25 வயதுக்குள் இருப்போர் அதிகமாக இபிஎப் அமைப்பில் பதிவு செய்துள்ளனர், இந்த வயது பரிவினர் மட்டும் மே மாதத்தில் 4.33 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
முதல்முறையாக வேலைக்குச் செல்பவர்கள், அமைப்பு சார்ந்த பணியில் சேரும்போது இந்த எண்ணிக்கை கிடைத்துள்ளது என தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஹரியானா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்கள் மட்டும் கடந்த மே மாதத்தில் 11.34 லட்சம் சந்தாரர்களை புதிதாகச் சேர்த்துள்ளனர்.
நாம எவ்வளவோ பரவாயில்ல!: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி ஆனந்த் நாகேஸ்வரன் ஆறுதல்
பாலின அடிப்படையில் பார்த்தால் கடந்த மே மாதத்தில் 3.42 லட்சம் பெண்கள்சந்தாதாரர்களாகச் சேர்ந்துள்ளனர். இது மே மாத எண்ணிக்கையில் 20.39 சதவீதமாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.