
தங்கம் விலை கடும் ஏற்றத்தாழ்வு நிகழ்கிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 2 முறை உயர்ந்து, குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று சரிந்துள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 37ரூபாயும், சவரணுக்கு 296 ரூபாயும் குறைந்துள்ளது.
உலகின் 4-வது கோடீஸ்வரர் கவுதம் அதானி: வழிவிட்ட பில்கேட்ஸ்:ஓர் ஆண்டில் சொத்து இரு மடங்கு அதிகரிப்பு
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,667க்கும், சவரண் ரூ.37,336க்கும் விற்பனை ஆனது. இன்று காலை தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 37 ரூபாய் குறைந்து ரூ4,630ஆகவும், சவரணுக்கு ரூ.296 வீழ்ச்சி அடைந்து ரூ.37,040க்கும் விற்கப்படுகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4630ஆக விற்கப்படுகிறது.
சர்வதேச அளவிலும் சரி, உள்நாட்டிலும் சரி, தங்கம் விலை பெரும் ஊசலாட்டத்துடனே இருந்து வருகிரது. கடந்த 2 வாரங்களாகவே தங்கம் விலையில் பெரும் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்த வாரத்தில்கூட கடந்த 3 நாட்களில் இருமுறை விலை உயர்ந்தது, இன்று விலை குறைந்துள்ளது.
எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு: அக்டோபரில் விசாரணை : மஸ்க் கோரிக்கை நிராகரிப்பு
அமெரிக்க பெடரல் வங்கியை எதிர்பார்த்தே சர்வதேச சந்தை, உலக நாடுகள் காத்திருக்கின்றன. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டுவதால், தங்கத்தின் விலையில் தொடர்ந்து வீழ்ச்சியும், ஏற்ற இறக்கமும் இருந்து வருகிறது. கடந்த 3 வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,500 வரை குறைந்துள்ளது.
கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் தங்கம் சவரன் ரூ.37,016க்கு சென்றது. கடந்த சில மாதங்களில் இதுதான் குறைந்தபட்ச விலையாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை சவரன் ரூ.37,040 வரை குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் சவரன் ரூ.37ஆயிரத்துக்கு கீழ் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த 11ம் தேதியிலிருந்து இதுவரை தங்கத்தின் விலையில் கிராமுக்கு ரூ.50 அளவுக்கு மட்டுமே ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது.
நாம எவ்வளவோ பரவாயில்ல!: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி ஆனந்த் நாகேஸ்வரன் ஆறுதல்
தங்கத்தின் விலை சரிந்து வருவதால், நடுத்தரக் குடும்பத்தினர், சாமானியர்கள் தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் என்று தங்க நகை வர்த்தகர்களும், சந்தை வல்லுநர்களும் தெரிவி்க்கிறார்கள்
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி நேற்று விற்பனையான அதேவிலையில் தொடர்கிறது. வெள்ளி கிராம் ரூ.61 ஆகவும், ஒரு கிலோ ரூ.61,000க்கு விற்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.