நாம எவ்வளவோ பரவாயில்ல!: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி ஆனந்த் நாகேஸ்வரன் ஆறுதல்

By Pothy Raj  |  First Published Jul 20, 2022, 4:34 PM IST

மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட பிரிட்டன், ஜப்பான் நாடுகளின் கரன்ஸிகளோடு ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மிகக் குறைவுதான் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த் நாகேஸ்வரன் தெரிவித்தார்.


மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட பிரிட்டன், ஜப்பான் நாடுகளின் கரன்ஸிகளோடு ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மிகக் குறைவுதான் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த் நாகேஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு நேற்று 80ரூபாய்க்கும் கீழ் சென்றது. இன்று வர்த்தகம் முடிவில் முதல்முறையாக ரூபாய் மதிப்பு 80 ரூபாயில் நிலைபெற்றது. 

Tap to resize

Latest Videos

சிட்ரான் சி3 கார் இந்தியாவில் அறிமுகமானது: விலை என்ன? சிறப்பு அம்சங்கள் என்ன?

கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி்கு வந்தபின், ரூபாய் மதிப்பு 25 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

சர்வதேச காரணிகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் மதிப்பு அதிகரிப்பு போன்றவை ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணங்கள் என நிதிஅமைச்சர் குறிப்பிட்டார்

இந்நிலையில் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் இன்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அதில் அவர் பேசியதாவது: 

உலகில் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளின் கரன்ஸி கூட தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக,  பிரிட்டனின் பவுண்ட், ஜப்பானின் யென், யூரோ ஆகியவை கூட சர்வதேசக் காரணிகளால், மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. வளர்ந்த நாடுகளின் கரன்ஸிகளோடு ஒப்பிடுகையில் இ்ந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறைவுதான்.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பெடரல்ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துவதால்தான் இந்திய கரன்ஸி மட்டுமல்ல உலக நாடுகளின் கரன்ஸியும் நெருக்கடிக்கு ஆளாகின்றன.

ரூபாய் மதிப்பு இதுவரையில்லாத வரலாற்று சரிவு: டாலருக்கு எதிராக ரூ80க்கும் கீழ் வீழ்ந்தது

அதுமட்டுமல்லாமல் அமெரி்க்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியதால், இந்திய சந்தையிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளின் சந்தையிலிருந்தும் முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப்பெற்றனர். இதனால், இந்திய ரூபாய்க்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு மதிப்பு சரிந்தது.

இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக வீழ்ச்சிஅடைந்ததைவிட, யூரோ, யென், பவுண்ட் ஆகியவை சரிந்த அளவு அதிகமாகும். ரூபாய் மதிப்புச் சரிவைத் தடுக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்துதான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவுக்குள் அந்நிய முதலீடு வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவு பொருளாதாரத்துக்கு நல்லதுதான்: நிர்மலா சீதாராமன்
இவ்வாரு ஆனந்த் நாகேஸ்வரன் தெரிவித்தார்.

click me!