டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், தனது நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஷிவான் ஜில்ஸுடன் சேர்ந்து இரட்டைக் குழந்தைகளை 2021, நவம்பரில் பெற்றெடுத்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், தனது நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஷிவான் ஜில்ஸுடன் சேர்ந்து இரட்டைக் குழந்தைகளை 2021, நவம்பரில் பெற்றெடுத்துள்ளார்.
இலங்கையில் 60 லட்சம் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பில்லை: ஐ.நா. எச்சரிக்கை
ஆனால், இந்தத் தகவல் இப்போதுதான் வெளி உலகிற்கு கசிந்துள்ளது.
நியூராலிங்க் நிறுவனம்
எலான் மஸ்க்கின் சிப் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் நியூராலிங்க். இந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஷிவன் ஜில்ஸ். இருவரும் சேர்ந்து இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க்,ஜில்ஸ் இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளின் பெயர் மாற்றுவது தொடர்பாக மனு அளித்தனர்.
கோதுமைக்கு மட்டுமல்ல, கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள்: மத்திய அரசு திடீர் முடிவு
அதில் தந்தையின் பெயரை குழந்தைக்கு கடைசிப் பெயராகவும், தாயின் பெயரை குழந்தையின் நடுப்பெயராகவும் வைக்கவும் மனுவில் எலான் மஸ்க், ஜில்ஸ் இருவரும் தெரிவித்திருந்தனர்.
பெயர் மாற்றம்
மஸ்க், ஜில்ஸ் இருவரின் கோரிக்கையை ஏற்று குழந்தையின் பெயரை மார்ற டெக்சாஸ் நீதிபதி ஒப்புதல் அளித்தார்.
கடந்த 2016ம் ஆண்டு ஜில்ஸ், எலான் மஸ்க்கை செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றில் சந்தித்தார். அப்போது அந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக மஸ்கும், நிர்வாகக் குழுவில் ஜில்ஸும் இருந்தனர்.
அதன்பின் நியூராலிங்க் நிறுவனத்தின் இயக்குநராகவும், 2017ம் ஆண்டிலிருந்து நிறுவனத்தின் துணைத்தலைவராகவும் ஜில்ஸ் இருந்து வருகிறார். டெஸ்லா நிறுவனத்துக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு திட்டத்துக்கும் இயக்குநராக ஜில்ஸ் நியமிக்கப்பட்டார்.
கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிவு: தொடர்ந்து வீழ்ச்சி அடைய என்ன காரணம்?
எலான் மஸ்கிற்கு எத்தனை குழந்தைகள்
எலான் மஸ்கிற்கு இந்த இரட்டைக் குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் 9 குழந்தைகள் உள்ளனர்.
கனடா நாட்டு பாடகர் கிரிம்ஸை திருமணம் செய்த எலான் மஸ்கிற்கு 2 குழந்தைகள் பிறந்தனர். அதன்பின் கனடா எழுத்தாளரான முன்னாள் மனைவி ஜஸ்டின் வில்ஸனுடன் சேர்ந்து எலான் மஸ்கிற்கு 5 குழந்தைகள் உள்ளனர். தற்போது ஜில்ஸைத் திருமணம் செய்து இரட்டை குழந்தைகள் பெற்றதையடுத்து,மொத்தம் 9 குழந்தைகள் உள்ளனர். கிரம்ஸுக்கு 2வது குழந்தை பிறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் ஜில்ஸுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.