edible oil price: oil price: சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.15 வரை குறைகிறது: விவரம் என்ன?

By Pothy Raj  |  First Published Jul 7, 2022, 1:06 PM IST

சமையல் எண்ணெய் விலை அடுத்த வாரத்துக்குள் லிட்டருக்கு ரூ10 முதல் ரூ.15 வரை குறைக்கப்படும் என்று மத்திய அரசிடம் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் அமைப்பு உறுதியளித்துள்ளனர்


சமையல் எண்ணெய் விலை அடுத்த வாரத்துக்குள் லிட்டருக்கு ரூ10 முதல் ரூ.15 வரை குறைக்கப்படும் என்று மத்திய அரசிடம் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் அமைப்பு உறுதியளித்துள்ளனர்

அவசியம் படிங்க:வருகிறது கார், வேன், லாரிகளுக்கான புதிய தரவரிசை: 2023 ஏப்ரலில் அறிமுகம்: விவரம் என்ன?

Tap to resize

Latest Videos

சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு கூட்டமைப்பின் நிர்வாகிகள், மத்திய உணவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது விலை குறைப்பு குறித்த உறுதியளிப்பை சமையல் எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் கூட்டமைப்பு அளித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சமையல் எண்ணெய் விலை குறைப்பு அமலுக்கு வரும்போது நாடுமுழுவதும் ஒரேசீராக விலை குறைப்புஅமலாக வேண்டும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில் மட்டும் விலை குறைப்பு செய்யக்கூடாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் படிக்கமறக்காதிங்க: கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிவு: தொடர்ந்து வீழ்ச்சி அடைய என்ன காரணம்?

இந்தியா சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால், ரஷ்யா உக்ரைன் போர், இந்தோனேசியா, மலேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை போன்றவற்றால் சமையல் விலை கடுமையாக உயர்ந்தது. இந்தோனேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு நீக்கப்பட்டதையடுத்து, சர்வதேச அளவில் விலை குறைந்தது. மத்திய அரசு பாமாயில் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியது.

இதைத் தொடர்ந்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.10 முதல் 15 வரை குறைத்தனர். இந்நிலையில் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளதால், விலையை மேலும் குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியது.

இது தொடர்பாக மத்திய உணவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சுதான்சு பாண்டே தலைமையில் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள் கூட்டமைப்பு நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினர். 

இதைப்படிங்க: கோதுமைக்கு மட்டுமல்ல, கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள்: மத்திய அரசு திடீர் முடிவு

அப்போது மத்திய அரசு தரப்பில் “ சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 சதவீதம் விலை வீழ்ந்துள்ளது. இந்த விலைக் குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு வழங்கிட வேண்டும். ஆதலால் விலை குறைப்பு செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள், சுத்திகரிப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள், சமையல் எண்ணெய் விலையில் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ15 வரை அடுத்த ஒரு வாரத்தில் குறைக்ககப்படும் என உறுதியளித்தனர். சமையல் எண்ணெய் விலை குறைக்கப்படும்போது, சில்லரையில் விற்கப்படும் மற்ற சமையல் எண்ணெய் விலையும் குறையத் தொடங்கும்.

மத்திய உணவுத்துறை செயலாளர் பாண்டே பேசுகையில் “ சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் விலைக் குறைப்பு செய்தாலும் அது நாடுமுழுவதும் சீராக இருப்பதில்லை. தற்போது பல்வேறு மண்டலங்களுக்கு இடையே சமையல் எண்ணெய் விலை ஒரேவிதமான பிராண்டுக்குக் கூட விலை வேறுபாடு ரூ.3 முதல் ரூ.5 வரை மட்டுமே இருக்கிறது.

அதிகபட்ச சில்லரை விலையில் போக்குவரத்துக் கட்டணமும் சேர்ந்துவிடுகிறது. ஆதலால் எம்ஆர்பி விலை மாறக்கூடாது. நாடுமுழுவதும் ஒரே மாதிரியான விலைக் குறைப்பை அமல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

3வதாக சமையல் எண்ணெய் பிராண்டுகளில் நியாயமற்ற விலைக் கொள்கை பின்பற்றப்படுவதாகவும் நுகர்வோர்களிடம் புகார்கள் வருவதையும் மத்திய அரசு சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. 


 

click me!