sri lanka economic crisis: இலங்கையில் 60 லட்சம் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பில்லை: ஐ.நா. எச்சரிக்கை

By Pothy RajFirst Published Jul 7, 2022, 1:50 PM IST
Highlights

இலங்கையில் 60 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். 10 குடும்பங்களில் 3 குடும்பங்கள் அடுத்த வேலை உணவு கிடைப்பதில் உறுதியற்ற சூழல் நிலவுகிறது என்று ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம்(wfp) எச்சரித்துள்ளது.

இலங்கையில் 60 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். 10 குடும்பங்களில் 3 குடும்பங்கள் அடுத்த வேலை உணவு கிடைப்பதில் உறுதியற்ற சூழல் நிலவுகிறது என்று ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம்(wfp) எச்சரித்துள்ளது.

 

இலங்கைப் பொருளாதாரம் மிக அபாயகரமான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இலங்கை அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாகக் குறைந்துவிட்டதால், வெளிநாடுகளின் உதவியைத்தான் எதிர்பார்த்திருக்கிறது. பெட்ரோல், டீசல் இறக்குமதிக்கு கூட அந்நியச் செலாவணி இல்லாததால் இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளிடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது.

இலங்கையை தேசத்தை மோசமான பொருளாதாரச் சூழலுக்குத் தள்ளிய அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள், பால் பொருட்கள் அனைத்தும் விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. தினசரி 12மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு என மக்கள் கொடுமையான சூழலை எதிர்கொண்டு வருகிறார்கள்.

இலங்கையில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துவிட்டதையடுத்து, இலங்கையில் உள்ள குடும்பங்களில் 61 சதவீதம் பேர், தினசரி உணவுக்காகச் செலவிடும் தொகையைக் குறைத்துவிட்டனர். சத்துக் குறைவான, விலை குறைந்த உணவுப் பொருட்களைத்தான் இலங்கை மக்கள் சாப்பிடுகிறார்கள்

ஐ.நா.வின் உலக உணவு திட்டம் கூறுகையில் “ இலங்கையில் பொருளாதாரம் மேலும் மோசமாகும்போது, மக்களின் நிலை இதைவிட மோமாகும். மக்கள் பெரும் வறுமையில் சிக்குவார்கள், 10 குடும்பங்களில் 3 குடும்பங்களுக்கு அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாமல் போகும். இலங்கை மக்கள் வெறும் அரிசி மற்றும் குழம்பு மட்டுமே சாப்பிடுகிறார்கள் சத்தான காய்கறிகளுக்கு வழியில்லை” என கவலைத் தெரிவித்துள்ளது.

சத்தான உணவுப் பொருட்கள் இல்லாமல் மக்கள் உணவு சாப்பிட்டால் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் உடல்நிலை பெரும் ஆபத்துக்குள்ளாகும் என்று உலக உணவுத் திட்டம் எச்சரிக்கிறது

உலக உணவுத் திட்டத்தின் வெளியிட்ட அ றிக்கையில் “ கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகள் சத்தான உணவுகளை தினசரி எடுக்க வேண்டும். ஆனால், இலங்கையில் நிலவும் ஏழ்மையான சூழல் அதற்கு வழியில்லை. செலவைக் குறைக்கும் வகையில் கர்ப்பிணிகள் உணவு சாப்பிடாமல் தவிர்ப்பதும், குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்காமல் இருப்பதும் பெரிய அளவிலான உடல்ரீதியான சிக்கலை ஏற்படுத்தும். 

அதிலும் வேளாண் தொழிலிலும், தோட்டத் தொழிலிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் நிலை மோசமாக இருக்கிறது. இந்தத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உணவுப் பாதுகாப்பற்ற சூழலுடன் உள்ளனர்.

இலங்கையின் மோசமான பொருளாதாரச் சூழல் மக்களை ஏழ்மையிலும் பட்டினிக்கும் தள்ளியுள்ளது. இலங்கை மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் செல்வார்கள் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.  இந்த சூழலை உணர்ந்து 6 கோடி டாலர் மதிப்பிலான உணவுப் பொருட்களை வழங்க உலக உணவுத் திட்டம் முடிவு செய்துள்ளது. மனிதநேய பேரழிவுக்குச் செல்லும் முன் நாம் விரைந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

click me!