kisan vikas patra: இந்திய அஞ்சல்துறை முதலீட்டுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது, ஏராளமான திட்டங்களை வைத்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பாகவும், நிலையான வருமானம் ஈட்டவும் நம்பிக்கையானது அஞ்சல்துறை முதலீடு.
ஏராளமான திட்டங்களை வைத்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பாகவும், நிலையான வருமானம் ஈட்டவும் நம்பிக்கையானது அஞ்சல்துறை முதலீடு.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.25 நஷ்டத்தில் விற்பனை: கண்ணீரில் விற்பனையாளர்கள்
ரொம்பவும் ரிஸ்க் எடுக்க வேண்டாம், பங்குச்சந்தையில் போட்டு லாபம் பார்க்க வேண்டாம், முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும், நீண்டகாலத்தில் நல்ல பலன் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அஞ்சலக முதலீடு சிறந்தது.
இந்தியா போஸ்ட் வழங்கும் திட்டங்கள் அரசால் வழங்கப்படுபவை என்பதால், முதலீட்டுக்கு மோசம் வராது. மற்றொரு சலுகை என்னவென்றால், அஞ்சலகத்தில் முதலீடு செய்திருந்தால்,வருமானவரிச்சட்டம் 80சி பிரிவில்முதலீட்டாளர்கள் விலக்கு பெறலாம்.
இதில் கிஷான் விகாஸ் பத்திரம் திட்டம்தான் முதலீட்டை இருமடங்காக மாற்றும்திட்டமாகும். கடந்த 1988ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் முதலீட்டுக்கு 6.90 சதவீதம் வட்டி தரப்படுகிறது
வட்டிவீதம்
என்ன சொல்றீங்க! ஆதார் கார்டு வெச்சு உடனடி கடன் வாங்கலாமா! விண்ணப்பிப்பது எப்படி?
இந்த சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு கூட்டுவட்டி 6.90சதவீதம் வழங்கப்படுகிறது. முதலீடு செய்யும் பணம் 10ஆண்டுகள் 4 மாதங்களில் இருமடங்காகும். குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடுசெய்யலாம், அதிகபட்சத்துக்கு கட்டுப்பாடுஇல்லை.
யாருக்குத் தகுதி
இந்தியா போஸ்ட் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தனிநபராகஇருப்போர், 3 வயதுவந்தோர் சேர்ந்து முதலீடு செய்யலாம், மைனர் சார்பில் பாதுகாவலர் முதலீடு செய்யலாம், 10வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெயரிலேயே முதலீடு செய்யலாம். எத்தனைக் கணக்கு வேண்டுமானாலும் இதில் வைக்க முடியும்
முதிர்ச்சி காலம்
இந்தத் திட்டத்தின் முதிர்ச்சி காலத்தை மத்திய நிதிஅமைச்சகம் டெபாசிட் செய்யப்பட்டகாலத்திலிருந்து ஒவ்வொருஆண்டும் மாற்றும். பெரும்பாலும் 124 மாதங்களில் முதிர்ச்சி அடையும். லாக்கின் காலம் 30 மாதங்கள். முதலீடு செய்துவிட்டால் 30 மாதங்களுக்கு பணத்தை திரும்ப எடுக்க முடியாது.
தடம் பதிக்கும் இந்தியா! UPI,ரூபே கார்டுகளை பிரான்ஸிலும் விரைவில் பயன்படுத்தலாம்
கிஷான் விகாஸ் பத்திரக் கணக்கை முன்கூட்டியே எப்போது வேண்டுமானாலும் முடிக்கலாம். ஆனால், திட்டத்தின் முதிர்ச்சி என்பது சில நிபந்தனைக்கு உட்பட்டது.
1. கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களில் யாரேனும் ஒருவர் உயிரழந்தால் கணக்கை முடிக்கலாம்.
2. நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் கணக்கை முடிக்கலாம்
3. முதலீடு செய்து 2 ஆண்டுகள், 6 மாதங்களுக்குப்பின்கணக்கை முடிக்கலாம்
கணக்கை வேறு ஒருவருக்கு மாற்றுதல்
SBI கடன் வட்டி வீதம் உயர்வு; HDFC, BoB வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி
கிசான் விகாஸ் பத்திர சேமிப்பில் கணக்கை ஒருவர் பெயரிலிருந்து மற்றொருவருக்கு மாற்றலாம். இதுவும் நிபந்தனைக்கு உட்பட்டது
1. கணக்குவைத்திருப்பவர் உயிரிழந்தால், வாரிசுதாரருக்கு கணக்கை மாற்றலாம்
2. கூட்டுகணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் உயிரிழந்தால் மாற்றலாம்.
3. நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் கணக்கை வேறுநபருக்கு மாற்றலாம்.
4. கிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீட்டாளர் இந்த சான்றிதழை வங்கியில் அடமானமாக வைத்து குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.