gst council: ஆன்-லைன் கேம், குதிரைப் பந்தயம், கேசினோஸ் ஆகியவற்றுக்கு உச்சபட்சமாக 28 சதவீதம் வரிவிதிக்க மாநில அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
ஆன்-லைன் கேம், குதிரைப் பந்தயம், கேசினோஸ் ஆகியவற்றுக்கு உச்சபட்சமாக 28 சதவீதம் வரிவிதிக்க மாநில அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
4 காரணங்கள்தான்: நீங்கள் பேச்சலாரானாலும் Term insurance தேவை
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை(28ம்தேதி), நாளை மறுநாள்(29ம்தேதி) சண்டிகர் நகரில் நடக்க இருக்கிறது. முதலில் ஸ்ரீநகரில் நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால், பாதுகாப்பு காரணங்களால் சண்டிகருக்கு மாற்றப்பட்டது.
சூதாட்ட கிளப்புகள்(கேசினோஸ்), குதிரைப் பந்தயம், ஆன்-லைன் கேம் ஆகியவற்றுக்கு தற்போது 18 சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது. இவற்றுக்கு வரியை அதிகப்படுத்த வேண்டும் என்று பலதரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மே மாதம் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் மாநில நிதிஅமைச்சர்கள் குழுவை அமைத்தது.
கான்டஸா காரை நினைவிருக்கா! இந்துஸ்தான் மோட்டார்ஸ் contessa brand-டை தனியாருக்கு விற்றது
இந்தக் குழுவில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், குஜராத் நிதிஅமைச்சர் கனுபாய் படேல், கோவா பஞ்சயத்ராஜ் அமைச்சர் மவின் கோதின்ஹோ, தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் தியாகராஜன், உ.பி. நிதிஅமைச்சர் சுரேஷ் கண்ணா, தெலங்கானா நிதிஅமைச்சர் டி ஹரிஸ் ராவ் ஆகிய 8பேர் இடம் பெற்றனர்.
இந்த அமைச்சர்கள் குழு தங்களின் அறிக்கையை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் தாக்கல் செய்துள்ளது. 28,29ம் தேதி நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுதொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
அமைச்சர்கள் குழு அளித்த பரிந்துரையில் “ குதிரைப்பந்தயம், கேசினோஸ், ஆன்-லைன் கேமிங் ஆகியவற்றுக்கு தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதை 28 சதவீதமாக உயர்த்தலாம் எனப் பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக ஆன்-லைன் கேமிங்கிற்குள் ஒருவர் நுழைந்தாலை ஜிஎஸ்டியின் முழுமையான வரியைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிகள் அமலாவது ஒத்திவைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
அதேபோல குதிரைப்பந்தயத்தில் பங்கேற்போரும் முழுமையான ஜிஎஸ்டி வரியைச் செலுத்தியபிறகுதான் அதில் பங்கேற்க வேண்டும்.
கேசினோஸைப் பொறுத்தவரை, ஒருவர் அங்கு சென்று, அங்கு வாங்கும் சிப்ஸ் அல்லது காயின்களுக்கு முழுமையாக 28சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும். ஆனால், அவர் வெற்றி பெறும் பணம், ஒவ்வொரு ரவுண்டு பெட்டிங் ஆகியவற்றகு்குத் தேவையில்லை.
அவர் வாங்கும் காயின்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிக்க வேண்டும். கேசினோவுக்குள் நுழைந்தாலும், அங்கு வாங்கும் உணவு, பானங்கள், மது ஆகியவற்றுக்கும் 28சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
தற்போது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள், பான்மசாலா, புகையிலை, காற்று அடைக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றுக்கு மட்டும் விதிக்கப்படுகிறது.