itr filing: Form-16 என்றால் என்ன? அடிப்படைத் தகவல்கள்: கேள்விகளும் பதில்களும்

By Pothy RajFirst Published Jun 27, 2022, 1:57 PM IST
Highlights

what is form-16: புதிதாக, முதல்முறையாக வருமானவரித் ரிட்டன் தாக்கல்(ITR) செய்ய இருப்போர் அனைவரும் ஃபார்ம்-16(form-16) பற்றி தெரிந்திருத்தல் அவசியமானது.

புதிதாக, முதல்முறையாக வருமானவரித் ரிட்டன் தாக்கல்(ITR) செய்ய இருப்போர் அனைவரும் ஃபார்ம்-16(form-16) பற்றி தெரிந்திருத்தல் அவசியமானது.

ஃபார்ம்-16 என்பது நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். வருமானவரி செலுத்தும் அளவு ஊதியம் வாங்கும்போது, நிறுவனம் வரி செலுத்த நம்முடைய ஊதியத்திலிருந்து சிறிய பகுதியைப்  பிடித்து வரிசெலுத்துவார்கள். இதற்கு டிடிஎஸ் என்று பெயர். 

அப்படியெல்லாம் முடியாது! ட்ரண்டாகும் பாஸ்டேக் வீடியோ போலி: பேடிஎம், என்பிசிஐ விளக்கம்

இந்த பிடித்தம் செய்யப்பட்ட விவரங்கள், நமது ஊதியம் தொடர்பான விவரங்கள் அடங்கியதுதான் ஃபார்ம்-16. நிறுவனங்கள் அரசுக்கு வரி செலுத்தியபின் இந்த ஃபார்ம்-16 படிவத்தை ஊழியர்களுக்கு வழங்கும், இந்த ஃபார்ம்-16 மூலம்தான் வருமானவரித் தாக்கல் செய்ய முடியும். ஆதலால் வருமானவரி செலுத்துவோருக்கு இது முக்கியமானது.

ஃபார்ம்-16 பெறத் தகுதி

ஒரு ஊழியர் வாங்கும் ஊதியம் வருமானவரி செலுத்தும் அளவில் இருந்து, அதற்கு நிறுவனம் வரிப்பிடித்தம் செய்தால், அந்த ஊழியர் ஃபார்ம்-16 பெறத் தகுதியானவர். ஊழியர் பெறும் ஊதியம் வருமானவரி செலுத்தும் வரம்புக்குள் வந்தாலும் அல்லது வரிக்கழிவுக்கான கணக்கை காண்பித்து வரிச்சலுகை பெற்றாலும் ஃபார்ம்-16 அவசியமாகும்.

ஃபார்ம்-16 ஏன் முக்கியம்

வருமானவரியை எளிதாகச் செலுத்த ஃபார்ம்16 படிவம்தான் உதவும். உங்கள் ஊதியத்திலிருந்து பிடிக்கப்பட்ட தொகையை அரசுக்கு செலுத்திவிட்டோம் என்பதை நிறுவனம் உறுதி செய்யும் படிவமாகும். நிதியாண்டு தொடக்கத்தில் முதலீடு செய்துள்ள விவரங்கள் அடிப்படையில் வருமானவரியைக் கணக்கிடப்பட்ட விவரங்களைக் கொண்டிருக்கும். இதனால் வருமானவரி ரிட்டனை எளிதாகத் தாக்கல் செய்ய இயலும்.

ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வசூலிப்பு 2026மார்ச் வரை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

ஃபார்ம் 16 எப்போது வழங்கப்படும்?

ஒரு நிறுவனம் தங்களின் ஊழியருக்கு ஃபார்ம்-16 படிவத்தை ஒவ்வொரு ஆண்டின் மே 31ம்தேதிக்குள் வழங்கவேண்டும். அப்போதுதான் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய போதுமான அவகாசம் ஊழியருக்கு இருக்கும்.

ஃபார்ம் -16ஏ மற்றும் ஃபார்ம்-16பி என்றால் என்ன

ஃபார்ம்-16 படிவத்தில் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான அனைத்து விவரங்களும்அடங்கியிருக்கும். இதில் பகுதிஏ, பகுதிபி என்று உள்ளன. இந்த இரு பகுதிகளும் வரி செலுத்துவோரின் ஊதிய விவரங்களை பகுத்துக்காட்டும்

ஃபார்ம்-16 ஏ என்றால் என்ன

ஃபார்ம்-16 படிவத்தின் ஃபார்ம்-16ஏ படிவத்தில் ஊழியர் மற்றும் நிறுவனத்தின் விவரங்கள் அடங்கியிருக்கும்

1.    ஊழியரின் பெயர்

2.    ஊழியரின் முகவரி

3.    ஊழியரின் பான் எண்

4.    வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்

5.    வேலைசெய்யும் நிறுவனத்தின் முகவரி

6.    நிறுவனத்தின் பான் எண்

7.    நிறுவன முகவரி

8.    எந்தெந்ததேதியில் ஊழியரின் ஊதியத்தில் வரிக்காக பிடிக்கப்பட்டது, எந்தெந்தத் தேதியில் மத்திய அரசின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது, அரசு வழங்கிய செலான் ஆகிய விவரங்கள் இருக்கும்.

ஃபார்ம்-16(பி) என்றால் என்ன

ஃபார்ம்-16பி என்பது, ஊழியர் நிதியாண்டுதொடக்கத்தில் தான் தெரிவித்த முதலீட்டு விவரங்கள், அதற்குதாக்கல் செய்த ஆதாரங்கள்(மருத்துவக்காப்பீடு, சேமிப்புத்திட்டங்கள், காப்பீடு) அதை அடிப்படையாக வைத்து வரி எவ்வாறு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் இருக்கும். நிறுவனம் ஊழியருக்கு வழங்கும் சலுகைகள், இதர படிகள் அதாவது வீட்டுவாடகை, மருத்துவச்செலவு, வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ போன்றவை இருக்கும்

1.    ஊழியரின் ஒட்டுமொத்த ஊதியம்

2.    படிகள்

3.    ஊழியருக்கான வரி

4.    80சி விதிப்படி தள்ளுபடி

5.    வருமானவரிச் சட்டம் 80இ,80ஜி,80டிடிஏ விவரங்கள்

6.    ஒட்டுமொத்த வருமானத்தில் வரி

7.    செஸ் குறித்த விவரங்கள்

8.    வரிக்கழிவு விவரங்கள்

9.    கூடுதல் வரி

itr 2022-23: 2022-23ம் ஆண்டுக்கான IT ரிட்டனை நிரப்புவது எப்படி?: வருமானவரி துறை புதிய தகவல்

ஃபார்ம்16 நன்மை என்ன

ஃபார்ம்-16 படிவத்தின் மூலம் ஊழியரிடம் இருந்துபிடிக்கப்படும் பணம் மத்திய அரசின் கணக்கிற்கு முறைப்படி சேர்ந்துவிட்டது என்பதையும், நிறுவனம் ஊழியரிடம் இருந்து பிடித்த பணத்தை வேறு செயலுக்கு செலவுசெய்யவில்லை என்பது தெரிந்துகொள்ளலாம்.

1.    வருமானவரி செலுத்துவதற்கு ஃபார்ம்-16 அவசியம்

2.    நிறுவனம் முறைப்படி அரசுக்கு வரி செலுத்திவிட்டது என்பதை அறியலாம்.

3.    வரி எவ்வளவு செலுத்துகிறோம் என்பதை அறியலாம்

4.    புதிதாக கிரெடிட் கார்டு வாங்குபவர்கள் கடந்த 2 ஆண்டு ஃபார்ம்-16 அவசியம் தேவை.

5.    வீட்டுக்கடன், வாகனக் கடன் ஆகியவை பெறுவதற்கு ஃபார்ம்-16 அவசியமாகும். ஊதியவிவரம், வரிவிவரம் ஆகியவற்றை வங்கிக்கு வழங்கி விரைவாக கடன் கிடைக்க உதவும்.

6.    வெளிநாட்டுக்கு ஏதேனும் செல்ல இருந்தால் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்ம்-16 தாக்கல் செய்ய வேண்டும். அதில் ஊழியரின் ஊதியவிவரம், வரி செலுத்தும் திறன், வெளிநாட்டுபயணத்தின் செலவை தாங்குவாரா என்பதை அறிய முடியும். 


 

click me!