படிங்க, பயன்படுத்துங்க! மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு வருமான வரிச் சலுகைகளா?

By Pothy Raj  |  First Published Jun 27, 2022, 4:21 PM IST

income tax slab for senior citizens: வருமானவரி என்று வரும்போது பிற வரி செலுத்துவோரைவிட, மூத்த குடிமக்களுக்கு அதிகமான சலுகைகள் இருக்கின்றன. அதிலும் வருமானவரிச் சலுகைகள் பல, மூத்தகுடிமக்களை நோக்கமாகவைத்தே உருவாக்கப்பட்டவை. 


வருமானவரி என்று வரும்போது பிற வரி செலுத்துவோரைவிட, மூத்த குடிமக்களுக்கு அதிகமான சலுகைகள் இருக்கின்றன. அதிலும் வருமானவரிச் சலுகைகள் பல, மூத்தகுடிமக்களை நோக்கமாகவைத்தே உருவாக்கப்பட்டவை. 

வருமானவரி ரி்ட்டன் இ-பைலிங் மிகவும் எளிமையாக்கப்பட்டதே மூத்த குடிமக்களை மனதில் வைத்துதான் என்பதில் மிகையில்லை.

Tap to resize

Latest Videos

Form-16 என்றால் என்ன? அடிப்படைத் தகவல்கள்: கேள்விகளும் பதில்களும்

வருமானவரி சட்டத்தின்படி 60 முதல் 80வயதுள்ள முதியோர் மூத்த குடிமக்கள் என்றும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் சூப்பர் சீனியர் சிட்டிஸன்கள் என்றும் அழைக்கப்படுவகிறார்கள். மூத்த குடிமக்களுக்காக மட்டும் வருமானவரித்துறை பிரத்யேகமாக 7 விதமான சலுகைகளை வழங்குகிறது

மருத்துவக் காப்பீடு

மூத்த குடிமக்கள் வருமானவரிச்சட்டம் 80டி பிரிவில் ரூ.50ஆயிரம்வரை மருத்துவக் காப்பீட்டுக்கு தள்ளுபடி பெறலாம்.

அடிப்படை வரிவிலக்கு பலன்கள்
வரிசெலுத்தும் பிரிவுக்குள் வருவோர் அடிப்படை விலக்கு பெற அனுமதிக்கப்படுவார்கள். மூத்த குடிமக்களைப் பொறுத்தவரை, அடிப்படை விலக்கு அளவு ரூ.3 லட்சமாகும், வரிசெலுத்தும் அளவு ரூ.3 முதல் 5 லட்சம் வரை வெறும் 5சதவீதம் மட்டும்தான்.

டாக்டர்கள் பெறும் பரிசுப் பொருட்களுக்கு TDS : வருமானவரித்துறை கிடுக்கிப்பிடி உத்தரவு

அட்வான்ஸ் டேக்ஸ் இல்லை.

எந்தவொரு வணிகமும் இல்லாத மூத்த குடிமக்கள் முன்கூட்டிய வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.  தங்கள் மொத்த வருமானத்தில் சுய மதிப்பீட்டு வரியை மட்டுமே அவர்கள் செலுத்தினால் போதுமானது.

வட்டிக்கு டிடிஎஸ் பிடித்தம் இல்லை.

மூத்த குடிமக்கள் ஆண்டுமுழுவதும் பெறும் ஊதியத்துக்கு முழுமையாக வரிவிலக்கு அளி்க்கப்படுகிறது. அவர்கள் வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு டிடிஎஸ் பிடிக்காமல் இருக்க, படிவம் 15ஹெச் மட்டும் வழங்கினாலே போதுமானது.

GSTயிலிருந்து விலக்கு பெறும் பொருட்கள், சேவைகள்: இடைக்கால அறிக்கை விரைவில் தாக்கல்

குறிப்பிட்ட நோய்களுக்கு கூடுதல் வரித்தள்ளுபடி

மூத்த குடிமக்கள் குறிப்பிட்ட வகை நோய்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டியதிருந்தால், வருமானவரிச் சட்டம் 80டிடிபி பிரிவின்படி வரித்தள்ளுபடி தரப்படும். அந்த வகையில், வரித்தள்ளுபடி ரூ.ஒரு லட்சம் வரை மூத்த குடிமக்கள் பெறலாம்.

ரூ.50ஆயிரம்வரை வட்டிவருவாய்க்கு விலக்கு

மூத்த குடிமக்கள் வைப்புத்தொகை, சேமிப்புகள்  உள்ளிட்ட பிற இனங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு ரூ.50ஆயிரம் வரை வருமானவரிச்சட்டம் 80டிடிபி பிரிவின்கீழ் தள்ளுபடி தரப்படுகிறது. 

அடமானத்துக்கு வரிவிலக்கு

மூத்த குடிமக்கள் தங்களின் மாத வருவாய் நோக்கத்திற்காக தங்களின் வசிப்பிடங்களில் ஒருபகுதி, அல்லது ஏதாவது ஒன்றை திரும்ப அடமானம் வைக்க விரும்பினால், மாத தவணைகளில் செலுத்தப்படும் தொகை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


 

click me!