தர்ஷன் மேத்தாவைத் தெரியுமா? 2007 முதல் அம்பானி நிறுவனத்தின் விசுவாசி!

By SG BalanFirst Published Apr 23, 2023, 2:57 PM IST
Highlights

தர்ஷன் மேத்தா ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட்டின் மேலாண்மை இயக்குநராக இருக்கிறார். 2007ஆம் ஆண்டு முதல் பணியாளராகச் சேர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுகிறார்.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பிராண்ட் நிறுவனம், பிரிட்டனைச் சேர்ந்த ப்ரெட் ஏ மேங்கர் (Pret A Manger) என்ற சாண்ட்விச் மற்றும் காபி விற்பனை நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கடைகளைத் திறக்க உள்ளது. இதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனம் டாடா-ஸ்டார்பக்ஸ் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காபி விற்பனை சந்தையில் தானும் இடம்பிடிக்க முயற்சி செய்கிறது.

முதல் கடை மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் திறக்கப்பட்டது. இந்த ஆண்டில், 10 காபி ஹவுஸ் விற்பனை நிலையங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ப்ரெட் ஏ மேங்கர் நிறுவனம் கைகோர்த்திருக்கும் ரிலையன்ஸ் ரீடெய்லின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தலைமையில் இயங்குகிறது. இந்த நிறுவனத்துக்கு மேலாண்மை இயக்குநராக இருப்பவர்தான் தர்ஷன் மேத்தா. 2007 இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் முதல் பணியாளரும் இவரே.

இந்தியாவில் காபி ஹவுஸ் சந்தையில் டாடா - ஸ்டார்பக்ஸ் 275 காபி ஹவுஸ்களுடன் பெரும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக உள்ளது. இது இந்தியாவின் டாடா நிறுவனம் அமெரிக்க காபி ஹவுஸ் நிறுவனமான ஸ்டார்பக்ஸ் உடன் இணைந்து தொடங்கப்பட்டதாகும். கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 50 கடைகளை டாடா - ஸ்டார்பக்ஸ் அறிமுகப்படுத்தியது. இதேபோன்ற கூட்டு முயற்சியில் ரிலையன்ஸ் பிராண்ஸ் மற்றும் ப்ரெட் ஏ மேங்கர் ஆகியவை களம் இறங்குகின்றன.

மாதம் ரூ.250 முதலீடு செய்தால் 5 லட்சம் கிடைக்கும் - செல்வ மகள் சேமிப்பு திட்டம் பற்றிய முழு விபரம்

ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்

ரீடெய்லின் ஒரு பகுதியான ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனம் டிசைனர் ஆடைகள், பைகள் மற்றும் உணவுத் துறைகளில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பிராண்டுகளுடன் இணைந்து செயல்படுகிறது. இந்தியாவில் ஆடம்பர ஃபேஷன் மற்றும் லைஃப் ஸ்டைல் சந்தையில் முன்னணியில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, நிறுவனம் ஜியோர்ஜியோ அர்மானி, போட்டேகா வெனெட்டா, ஜிம்மி சூ, பர்பெர்ரி மற்றும் சால்வடோர் ஃபெர்ராகமோ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஆடம்பர பிராண்டுகளுடன் இணைந்துள்ளது.

பிஎஃப் பேலன்ஸை ஈசியா செக் பண்ணலாம்.. எப்படி தெரியுமா..?

நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இப்போது 750 ஊழியர்கள் உள்ளனர். விற்பனை மையங்களில் பணிபுரிபவர்களையும் சேர்த்தால், 5000 பேருக்கு மேல் பணிபுரிவார்கள்.  60க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் 420க்கும் மேற்பட்ட ஒரே பிராண்ட் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும் 350 ஷாப்-இன்-ஷாப் மால்களையும் நடத்தி வருகிறது.

தர்ஷன் மேத்தா யார்?

இந்நிறுவனத்தில் 2007ஆம் ஆண்டு முதல் ஊழியராகச் சேர்ந்த தர்ஷன் மேத்தா ஒரு சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் (பட்டயக் கணக்காளர்). தொடக்கத்தில் விளம்பரத் துறையில் பணியாற்றினார். 2000 களின் முற்பகுதியில், டாமி ஹிலிகர், காண்ட் மற்றும் நாட்டிகா போன்ற பிராண்டுகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார்.

டிசம்பர் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில், ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனம் ரூ.67,634 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் லாபம் ரூ.2259 கோடியில் இருந்து ரூ.2400 கோடியாக உயர்ந்துள்ளது.  2020-21 ஆம் ஆண்டில் தர்ஷன் மேத்தாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.4.89 கோடி. ஓட்டப்பந்தய வீரரான இவர், மலையேற்றத்திலும் ஈடுபாடு கொண்டவர்.

காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் கைது! அசாம் சிறையில் அடைக்க ஏற்பாடு!

click me!