பிஎஃப் பேலன்ஸை சரிபார்க்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பல வழிகள் உள்ளன.
இந்தியாவின் மிகப் பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்று வருங்கால வைப்பு நிதி திட்டம், அதாவது பிஎஃப் திட்டம்.. இந்தியாவில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் பிஎஃப் தொகையை நிர்வகித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ஊழியர் தங்கள் பங்களிப்பாக கொடுக்க வேண்டும், அதே போல் நிறுவனமும் குறிப்பிட்ட தொகையை செலுத்தும்.. 20க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட நிறுவனம், ரூ.6291க்கு அதிகமாக சம்பளம் பெறும் பணியாளர்கள் பிஎஃப் திட்டத்தின் கீழ் வருவார்கள். ஓய்வு காலத்திற்கு பிறகு நிதி பாதுகாப்பை வழங்குவதால், ஒவ்வொரு ஊழியருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. கடன் உள்ளிட்ட பல சலுகைகளையும் இபிஎஃப்ஓ அமைப்பு வழங்குகிறது. எனவே பணியில் இருக்கும் போதே, ஒரு ஊழியர் பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும். பிஎஃப் பேலன்ஸை சரிபார்க்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பல வழிகள் உள்ளன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..
எஸ்எம்எஸ்: UAN தளத்தில் பதிவு செய்துள்ள பயனர்கள், பதிவுசெய்யப்பட்ட மொபைல் ஃபோனில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம், தங்களின் மிகச் சமீபத்திய PF பங்களிப்பு மற்றும் பிஎஃப் பேலன்ஸ் தொகை ஆகியவை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க : பொதுச்செயலாளரான கையோடு அமித்ஷாவை சந்திக்கும் இபிஎஸ்.. இதுதான் காரணமா? வெளியான பரபரப்பு தகவல்கள்..!
மிஸ்டு கால்: ஒரு உறுப்பினரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.. UAN இணையதளத்தில் பதிவு செய்திருந்தால் அவர்களின் EPFO கணக்கு பற்றிய தகவலை பெறலாம்..
EPFO போர்டல்: பிஎஃப் உறுப்பினர் e-Sewa தளத்தில் உங்களின் UAN எண் மற்றும் கடவுச்சொல் மூலம் epfindia.gov.in இல் உள்ள EPFO தளத்தில் உள்நுழைவதன் மூலம் உங்கள் பிஎஃப் பேலன்ஸ் தொடர்பான விவரங்களை சரிபார்க்கலாம்.
UMANG ஆப்: UMANG செயலி மூலம் ஊழியர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் தங்கள் பிஃப் கணக்கின் நிலையை சரிபார்க்கலாம். பிஎஃப் பேலன்ஸ் மற்றும் பிஎஃப் தொடர்பான தகவல்களை UMANG செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க : Mann Ki Baat : தமிழ்நாடு, தமிழ் மொழி பற்றி பிரதமர் மோடி இத்தனை விஷயம் சொல்லிருக்காரா..?