crude oil price: 2023ம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் விலை 45 டாலராகச் சரியும்: முதலீட்டாளர்கள் குழப்பம், பீதி

By Pothy RajFirst Published Jul 6, 2022, 11:56 AM IST
Highlights

2023ம் ஆண்டுக்குள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 45 டாலராக வீழ்ச்சி அடையலாம், என்று சந்தை ஆய்வு நிறுவனமான சிட்டி(Citi) தெரிவித்துள்ளது. 

2023ம் ஆண்டுக்குள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 45 டாலராக வீழ்ச்சி அடையலாம், என்று சந்தை ஆய்வு நிறுவனமான சிட்டி(Citi) தெரிவித்துள்ளது. 

கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிந்தது: இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை குறையுமா?

2022ம் ஆண்டு இறுதிக்குள் கச்சா எண்ணெய் விலை பேரல் 65 டாலராகவும், 2023ம் ஆண்டுக்குள் 45 டாலராகவும் வீழ்ச்சி அடையும் என்று சிட்டி நிறுவனம் கணித்துள்ளது. இவை அனைத்தும் சில நிபந்தனைகளுக்குள் இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. 

விலை குறையும் போது, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான ஒபேக் தலையிடாமல் இருக்க வேண்டும், கச்சா எண்ணெய் துறையில் முதலீடு குறைந்து வர வேண்டும். இந்த சாத்தியங்கள் அடிப்படையில் இந்த விலைக் குறைவு கணிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சரிவு: இந்தியா ரூபாய் மதிப்பு ரூ.79.36 ஆக வீழ்ந்தது: காரணம் என்ன?

சிட்டி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறித்து செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: 
சர்வதேச அளவில் எரிபொருட்கள் பொருட்களின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தாலும் ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதிள் வலுவாக இருக்கும். உலகளாவிய கச்சா எண்ணெய் தேவை பலவீனமடையும்போது, கச்சா எண்ணெய் விலையை மேலும் குறையும். 

2022ம் ஆண்டின் 3-வது காலாண்டில் அதாவது ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 99 டாலராகக் குறையும். 4-வது காலாண்டில் அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் கச்சா எண்ணெய் விலை பேரல் 85 டாலராகச் சரியும். 

ஒட்டுமொத்தமாக 2022ம் ஆண்டில் பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 98 டாலராகக் குறையும். 2023ம் ஆண்டில் பேரல் 75டாலராக வீழ்ச்சி அடையும்.

TDS விதி,30% வரியால் பீதி: இந்தியாவில் கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் 80% சரிந்தது

அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் குறித்து சிட்டி நிறுவனம் கூறுகையில் “ 2022ம் ஆண்டில் வெஸ்ட் டெஸ்சாஸ் கச்சா எண்ணெய் விலை பேரல் சராசரியாக 95 டாலராகக் குறையும், 2023ம் ஆண்டில் 72 டாலராக வீழ்ச்சி அடையும். 2022ம் ஆண்டின் 3-வது காலாண்டில் கச்சா எண்ணெய் விலை பேரல்94 டாலராகவும், 4-வது காலாண்டில் பேரல் 81 டாலராகவும் வீழ்ச்சி அடையும்” எனத் தெரிவித்துள்ளது. 

கச்சா எண்ணெய் சந்தை பல்வேறு காரணிகளால் சிக்கியுள்ளது, அதாவது, பொருளாதார மந்தநிலை, தேவை குறைந்து வருவது, சப்ளையில் தடைகள், விலையில் கடும் ஊசலாட்டம் ஆகிய காரணிகளால் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முரண்பட்ட ஆய்வறிக்கை

கடந்த வாரம் ஜேபி மோர்கன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு ஒவ்வொருவரையும் அதிர்ச்சி அடையவைத்தது. அதாவது, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் தடையைத் தொடர்ந்து ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்தால், ஒரு பேரல் கச்சா எண்ணெய்விலை 380 டாலராக அதிகரிக்கும் என எச்சரித்தது.

ஆனால், சிட்டி குரூப் வெளியிட்டஅறிவிப்பில், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காரணமாக 2022ம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் விலை பேரல் 65 டாலராக வீழ்ச்சி அடையும், 2023ம் ஆண்டுக்குள் பேரல் 45 டாலராகச் சரியும் என்று தெரிவித்துள்ளது.

இரு மிகப்பெரிய நிறுவனங்களும் கச்சா எண்ணெய் விலை குறித்து முரண்பாடான ஆய்வறிக்கை வெளியிட்டிருப்பதால், முதலீட்டாளர்கள் குழப்பத்துடனும், எந்த முடிவும் எடு்க்க முடியாமல் ஊசலாட்டமனநிலையுடன் உள்ளனர். 

click me!