gold rate today: தங்கம் விலை அதிரடி குறைவு: வெள்ளி விலை பெருவீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Jul 6, 2022, 10:05 AM IST
Highlights

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாக ஏறுமுகமாக இருந்த நிலையில் இன்று சரிந்துள்ளது.  சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 65ரூபாயும், சவரணுக்கு 520 ரூபாயும் அதிரடியாகக் குறைந்துள்ளது. 

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாக ஏறுமுகமாக இருந்த நிலையில் இன்று சரிந்துள்ளது.  சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 65ரூபாயும், சவரணுக்கு 520 ரூபாயும் அதிரடியாகக் குறைந்துள்ளது. 

வரலாற்றுச் சரிவு: இந்தியா ரூபாய் மதிப்பு ரூ.79.36 ஆக வீழ்ந்தது: காரணம் என்ன?

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,805க்கும், சவரண் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 குறைந்து, ரூ4,740 ஆகவும், சவரணுக்கு ரூ.520சரிந்து ரூ.37,920க்கும் விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்து வந்த நிலையில் இன்று திடீரெனச் சரிந்துள்ளது.  கடந்த 1ம் தேதியிலிருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. கடந்த 1ம் தேதிமுதல் தங்கத்தின் விலை கிராமுக்கு, 127 ரூபாய் அதிகரித்துள்ளது, சவரணுக்கு, ரூ1016 அதிகரித்துள்ளது. ஆனால், இன்று ஒரே நாளில் சவரணுக்கு ரூ.520 குறைந்துள்ளது.

HDFC ,HDFC வங்கி இணைப்புக்கு ரிசர்வ் வங்கி அனுமதி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று திடீரெனக் குறைந்து, பேரல் 100 டாலருக்கும் கீழ் சரிந்தது. இதையடுத்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கும், அதன் விலை மேலும் அதிகரிக்கும் என கருதப்பட்டது. ஆனால், தங்கத்தின் விலை சரிந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் தங்கம்  இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும், உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறைந்துள்ளது. 

அமெரிக்காவில் பணவீக்கத்தைக் குறைக்க வட்டிவீதத்தை பெடரல் வங்கி உயர்த்தும் பட்சத்தில் தங்கத்தின் விலை மேலும் சரியும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், அனைத்துக் கணிப்பையும் மீறி தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

போதும்டாசாமி! கிரிப்டோகரன்ஸி வர்த்தகம், டெபாசிட், திரும்பப்பெறுதலை நிறுத்திய வால்ட் நிறுவனம்

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.62.50க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.62,500க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதிரடியாக கிலோவுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது

click me!