service charge:சர்வீஸ் சார்ஜுடன் சேர்த்து ஹோட்டல் பில்லில் கொடுத்தால் என்ன செய்வது? விரிவான பதில்கள்

By Pothy RajFirst Published Jul 5, 2022, 5:46 PM IST
Highlights

ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பாக சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கக்கூடாது என்று அறிவுறுத்திய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பாக சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கக்கூடாது என்று அறிவுறுத்திய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்த விதிமுறையின்படி, ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் வலுக்கட்டாயமாக சர்வீஸ் சார்ஜ் வசூலித்தால் 1915 என்ற எண்ணில் புகார் செய்யலாம். 

வரலாற்றுச் சரிவு: இந்தியா ரூபாய் மதிப்பு ரூ.79.36 ஆக வீழ்ந்தது: காரணம் என்ன?

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் வழிமுறைகள் என்ன?

ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் நுகர்வோர்களிடம் தொடர்ந்து சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது. இதையடுத்து 5 முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிடுகிறோம்

1.    எந்த ஹோட்டலும், ரெஸ்டாரண்ட்களும் வாடிக்கையாளர்களிடம் தாங்களாகவே சர்வீஸ் சார்ஜ் கட்டணத்தைச் சேர்க்கக்கூடாது.

2.    சர்வீஸ் சார்ஜை வேறு எந்த பெயரிலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கக் கூடாது. 

3.    எந்த ஹோட்டலும், ரெஸ்டாரண்டும் வாடிக்கையாளரிடம் இருந்து வலுக்கட்டாயமாக சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கக்

      கூடாது. சர்வீஸ் சார்ஜ் என்பது வாடிக்கையாளர் விருப்பம். அவர்கள் விரும்பினால் தரலாம்.

4.    சேவை அடிப்படையிலான பணிகளுக்கும் கூட சர்வீஸ் சார்ஜை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தக்கூடாது.

5.    உணவுக்கட்டணத்திலோ அல்லது ஜிஎஸ்டியுடன் சேர்த்தோ சர்வீஸ் சார்ஜை வசூலிக்கக் கூடாது.

எஸ்பிஐ(SBI) வாடிக்கையாளர்களுக்கு புதியவசதி! இந்த 5 முக்கிய சேவைகளை மொபைலிலேயே பெறலாம்

ஹோட்டல், ரெஸ்டாரண்ட் நிர்வாகம் விதிமுறைகளை மீறும்போது, வாடிக்கையாளர் என்ன செய்யலாம்?

ஹோட்டல், ரெஸ்டாரண்ட் பில்லில் சர்வீஸ்சார்ஜ் சேர்க்கப்பட்டிருந்தால், 4 விதங்கங்களில் இதை அணுக முடியும்

  • முதலாவதாக பில்லை ஹோட்டல், அல்லது ரெஸ்டாரண்ட் நிர்வாகத்திடம் அளித்து சர்வீஸ் கட்டணத்தை நீக்கும்படி வேண்டுகோள் விடுக்கலாம்.
  • 2வதாக, தேதிய நுகர்வோர் உதவி எண்ணில் ஹோட்டல், ரெஸ்டாரண்ட் நிர்வாகம் மீது புகார் அளிக்கலாம்.1915 என்ற உதவி எண்ணில் புகார் அளி்க்கலாம் அல்லது என்சிஹெச்(NCH) மொபைல் செயலியில் புகார் அளிக்கலாம்
  • 3வதாக நுகர்வோர் ஆணையம் அல்லது http://www.edaakhil.nic.in. என்ற இணையத்தில் புகார் அளிக்கலாம்
  • 4வதாக, மாவட்ட ஆட்சியரிடம் சென்று ஹோட்டல் நிர்வாகம் அல்லது ரெஸ்டாரண்ட் மீது புகார் அளித்து, நுகர்வோர் ஆணையத்துக்கு பரிந்துரைக்கக் கூறலாம். அது மட்டுமல்லாமல் மத்திய நுகர்வோர் ஆணையத்துக்கு நுகர்வோர் ஒருவர் நேரடியாக com-ccpa@nic.in. மின்அஞ்சல் வழியாக புகார் அளிக்கலாம்.
click me!