Bank Holiday Alert : அக்டோபரில் இன்னும் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முழு விவரம் இதோ..

By Ramya s  |  First Published Oct 18, 2023, 2:45 PM IST

அக்டோபரில் மீதமுள்ள விடுமுறை நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


அக்டோபர் மாதம் என்றாலே பண்டிகைகள் வரிசையாக களைகட்டும். இதனால் விடுமுறை நாட்களும் அதிகமாக இருக்கும் எனவே இந்த அக்டோபர் மாதத்தில் வரும் விடுமுறை நாட்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த கொண்டாட்டங்களின் போது நாட்டின் பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனினும் வங்கி விடுமுறைகள் மாநிலங்களுக்கு இடையில் வேறுபடலாம் என்றாலும், வங்கி விடுமுறை பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல வங்கி பணிகளை திட்டமிட்டு கொள்ள வசதியாக இருக்கும்.

இன்னும் சில நாட்களில் தசரா, துர்கா பூஜை ஆகிய பண்டிகைகள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளன. எனவே ரிசர்வ் வங்கி விதிமுறையின் படி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில், பண்டிகைகள், ஞாயிறுகள் மற்றும் இரண்டாவது/நான்காவது சனிக்கிழமைகள் என மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். அதன்படி அக்டோபரில் மீதமுள்ள விடுமுறை நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அக்டோபரில் மீதமுள்ள விடுமுறை நாட்கள்:

  • அக்டோபர் 18, 2023-கடி பிஹு (கௌஹாத்தி, இம்பால், கொல்கத்தாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை )
  • அக்டோபர் 21, 2023-துர்கா பூஜை/மகா சப்தமி (அகர்தலா, குவஹாத்தி, இம்பால், கொல்கத்தாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை)
  • அக்டோபர் 23, 2023- தசரா, ஆயுத பூஜை, துர்கா பூஜை, விஜய தசமி (அகர்தலா, பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, கவுகாத்தி, ஹைதராபாத், கான்பூர், கொச்சி, கோஹிமா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • அக்டோபர் 24, 2023-தசரா (ஹைதராபாத், இம்பால் தவிர நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை)
  • அக்டோபர் 25, 2023- துர்கா பூஜை/தசாய் (கேங்டாக்கில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை )
  • அக்டோபர் 26, 2023- துர்கா பூஜை அதாவது தசாய் (கேங்டாக், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • அக்டோபர் 27, 2023- துர்கா பூஜை/தசாய் (கேங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • அக்டோபர் 28, 2023- லட்சுமி பூஜை (கொல்கத்தாவில் வங்கிகளுக்கு விடுமுறை )
  • அக்டோபர் 31, 2023- சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் (அகமதாபாத்தில் வங்கிகளுக்கு விடுமுறை)

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் தேசிய விடுமுறை நாட்களிலும், உள்ளூர் பண்டிகைகளுக்கான பிராந்திய விடுமுறை நாட்களிலும் மூடப்பட்டிருக்கும்.

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல்

இருப்பினும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் கடைசி நேர இடையூறுகளையும் தவிர்க்க, வங்கி வாடிக்கையாளர்கள் அதற்கேற்ப வங்கி தொடர்பான பணிகளைத் திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், மொபைல் இன்டர்நெட் பேங்கிங் சேவைகள் மற்றும் ஏடிஎம்கள் நாடு முழுவதும் அனைத்து நாட்களிலும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!