அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல்

By SG Balan  |  First Published Oct 18, 2023, 2:21 PM IST

7th Pay Commission DA hike : 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்


அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்த மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவின் மூலம் மத்திய அரசுத் துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும்.

Tap to resize

Latest Videos

4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியானது தொழில்துறை சார்பில் தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகிறது.

முன்னதாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. குரூப் சி (Group C) மற்றும் கெசட் ரேங்க் இல்லாத குரூப் பி (Group B) ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது.

துணை ராணுவப் படைகளில் பணிபுரிபவர்களுக்கு உரிய தீபாவளி போனஸ் தொகை விடுவிக்கவும் ஒப்புதல் கிடைத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை தீபாவளி போனஸ் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

click me!