மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை தீபாவளி போனஸ் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. போனஸ் எப்போது கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அரசு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. குரூப் சி (Group C) மற்றும் கெசட் ரேங்க் இல்லாத குரூப் பி (Group B) ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது.
துணை ராணுவப் படைகளில் பணிபுரிபவர்களுக்கு உரிய தீபாவளி போனஸ் தொகை விடுவிக்கவும் ஒப்புதல் கிடைத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை தீபாவளி போனஸ் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எந்தெந்த பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வளவு போனஸ் தொகை கிடைக்கும் என்பதையும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாஸ்வேர்டு இல்லாமலே வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்... இனிமே பாஸ்கீ தான் எல்லாமே!
வெவ்வேறு நிலைகளில் ஊழியர்களுக்குக் கிடைக்கும் போனஸ் தொகை குறித்த விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 7 ரூபாய் போதும்.. மாதம் 5000 ரூபாய் ஓய்வூதியம் பெற முடியும்.. முழு விபரம் இதோ !!