GST Council 47th meeting Today: கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு கிடுக்கிப்பிடி! 28 % வரியா?

By Pothy Raj  |  First Published Jun 28, 2022, 11:16 AM IST

GST Council 47th meeting Today: இந்தியாவில் கிரிப்டோகரன்ஸிக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து சண்டிகரில் இருநாட்கள் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.


28 % tax for crypto transactions: இந்தியாவில் கிரிப்டோகரன்ஸிக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து சண்டிகரில் இருநாட்கள் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

6 மாதங்களுக்குப்பின் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: என்னென்ன விவாதிக்கப்படும்? விரிவான பார்வை

Tap to resize

Latest Videos

லாட்டரி, குதிரைப்பந்தயம், கேசினோஸுக்கு 28 சதவீதமாக ஜிஎஸ்டிவரியை உயர்த்த அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளநிலையில், கிரிப்டோக்களுக்கும் அதே வரிவிதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

சூதாட்ட கிளப், குதிரைப்பந்தயம், லாட்டரி ஆகியவற்றுக்கு விதிக்கப்படுவதுபோல் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி கிரிப்டோகரன்ஸிக்கும் விதிக்க மாநில நிதிஅமைச்சர்கள் கொண்ட குழு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் சட்டக்குழு இதுதொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து, கிரிப்டோகரன்சி தொடர்பான அனைத்து சேவைகள், செயல்பாடுகள் அனைத்துக்கும் 28சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்க பரிந்துரைத்துள்ளது என்றும், இதற்கான அறிக்கையை வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வைத்து, அனுமதி பெறப்படும் என மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

gst council: காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்: மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிக்கப்படுமா?

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில்  “ அந்நிய செலாவணி மூலம் கிரிப்டோகரன்ஸியை விற்றால் தற்போது 18சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது இதை தரகு வேலையாகக் கருத வேண்டும். இதை தனியாக ஒருபட்டியலின் கீழ் கொண்டுவரப்பட்டு வகைப்படுத்த வேண்டும். இதன்படி எங்கள் பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக்கொண்டால் கிரிப்டோகரன்ஸியின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்”எனத் தெரிவித்தனர்.

எரிபொருள், உணவுப் பொருட்கள் விலை உயர்வு அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது: ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி

ஜிஎஸ்டி தவிர்த்து ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் சொத்து தொடர்பான பரிமாற்றத்துக்கு 30 சதவீதம் வருமானவரி செஸ் மற்றும் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுலம்லாமல் ஆண்டுக்கு ரூ.10ஆயிரத்துக்கு அதிகமாக விர்ச்சுவல் கரன்ஸிக்காக பணப்பரிமாற்றம் செய்தாலும் ஒரு சதவீதம் டிடிஎஸும் பிடிக்கப்படுகிறது இது ஜூலை 1ம் தேதி முதல் அமலாகிறது

click me!