நிலையில்லாத தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Jun 28, 2022, 10:38 AM IST
Highlights

ஆபரணத் தங்கத்தின் விலை கடும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.  சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும், சரணுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.  சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும், சரணுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.

கடந்த ஒருவாரமாகவே தங்கத்தின் மதிப்பு கடும் ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது.  கடந்த 3 நாட்களாக தங்கத்தின் மதிப்பு ஏறுமுகமாகவே இருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

Form-16 என்றால் என்ன? அடிப்படைத் தகவல்கள்: கேள்விகளும் பதில்களும்
  
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,775க்கும், சவரண் ரூ.38,200க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,765 ஆகவும், சவரணுக்கு, ரூ. 80 குறைந்து, ரூ.38 ஆயிரத்து120க்கும் விற்பனையாகிறது. 

கடந்த 17ம் தேதிமுதல் இதுவரை தங்க நகை சவரண் ரூ.38ஆயிரத்தைக் கடந்து 10 முறை வந்துள்ளது. ரூ.38ஆயிரத்துக்கு கீழ் இரு முறை சென்றுள்ளது. தங்கத்தின் விலையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல்,  ரூ.38ஆயிரத்து 40 முதல் ரூ.38ஆயிரத்து 200 வரைதான் இருக்கிறது. இந்த விலைக்கு மேல் கடந்த ஒருவாரமாக விலை உயரவும் இல்லை, சரியவும் இல்லை.

அப்படியெல்லாம் முடியாது! ட்ரண்டாகும் பாஸ்டேக் வீடியோ போலி: பேடிஎம், என்பிசிஐ விளக்கம்

அதிலும் இன்றைய காலை நிலவரமான தங்கம் சவரண் ரூ.38,120 என்ற விலை கடந்த 18ம்தேதியிலிருந்து 5-வது முறையாக வந்துள்ளது. தங்கத்தில் விலையில் பெரிதாக வரும் நாட்களில் மாற்றம் இருக்காது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆதலால், தங்கத்தில் முதலீடு செய்ய இது ஏற்ற தருணம் என்று தங்க நகை வியாபாரிகளும், சந்தை வல்லுநர்களும் தெரிவிக்கிறார்கள்.

கடையசாத்து! 8 மாசத்துல 2 நிறுவன வர்த்தகத்தை இழுத்து மூடிய ஓலா

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.66க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.66,000 எனக் குறைந்துள்ளது. 

click me!