பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கும் தேதி இதுதானா? கன்ஃபார்மான போட்டியாளர் பட்டியல் இதோ..

By Ramya s  |  First Published Sep 13, 2023, 10:43 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க 7  போட்டியாளர்களின் பெயர்கள் உறுதியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரசிகர்கள் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியும் ஒன்று. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். பரபரப்புக்கும், பொழுதுபோக்கிற்கும் பஞ்சமே இருக்காது என்பதால் பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. எனினும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வழக்கம் போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டிருந்தது. அதில் 2 பிக்பாஸ் வீடு என்று கூறி கமல்ஹாசன் ட்விஸ்ட் வைத்திருந்தார். எனவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Latest Videos

தெரு தெருவா காய்கறி விக்கிற மாதிரி.. லண்டனில் விஜய் பட டிக்கெட் விற்பனை- சாதனைக்கு பின்னால் இப்படியொரு சோதனையா

இந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்கின்றனர் என்பது குறித்து பல தகவல்கள் சமூக வலைதலங்களில் வலம் வருகிறது. அதன்படி இந்த முறை விஜய் டிவி பிரபலங்கள் மாகபா ஆனந்த், ஜாக்குலின், ரக்‌ஷன், நடிகர் பிருத்விராஜ், ட்ரெண்டிங் டிரைவர் ஷர்மிளா, பயில்வான் ரங்கநாதன், நடிகர் சந்தோஷ் பிரதாப், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், காக்கா முட்டை விக்னேஷ், நடிகையும் மாடலுமான தர்ஷா குப்தா, நடிகைகள் உமா ரியாஸ், சோனியா அகர்வால், ரோஷினி (சீரியல் நடிகை), அம்மு அபிராமி, ரேகா நாயர், ரவீனா தாஹா, நிலா மற்றும் பிக் பாஸ் 6 போட்டியாளர் ரச்சிதாவின் கணவர் தினேஷ், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், விஜய் டிவி காமெடியன் சரத் ராஜ் ஆகியோர் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க 7  போட்டியாளர்களின் பெயர்கள் உறுதியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ளவர்களின் பெயர்களும் விரைவில் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, விஜய் டிவி பிரபலம் மாகாபா ஆனந்த், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி, குக் வித் கோமாளி புகழ் ரவீணா தாஹா, நடிகர் பப்லு, ப்ரித்விராஜ், நடிகை ரேகா நாயர், மாடல் தர்ஷா குப்தா, நடிகை ஷகிலாவின் மகள் மிலா ஆகியோர் இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது உறுதியாகி உள்ளதாம். 

இருட்டுக்கடை அல்வா முதல் பருத்திப்பால் பாயாசம் வரை... அசோக் செல்வன் திருமணத்தில் கமகமக்கும் பசுமை விருந்து

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்களான ஓவியா மற்றும் சாண்டி இருவரும் இந்த சீசனில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அவர் பாதியிலேயே நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிவிட்டார். எனவே இந்த முறை பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் ஓவியா பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 

அதேபோல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோரியோகிராபர் சாண்டி, ரசிகர்கள் ஆல்-டைம் ஃபேவரைட்டாக மாறினார். அந்த சீசனில் ஃபினாலே வரை சென்ற அவர், 2-ம் இடத்தை பிடித்தார். ஒவ்வொரு சீசனிலும் ஒரு கோரியோகிராபர் பங்கேற்பாளராக இடம்பெற்று வருகிறார். கடந்த பிக்பாஸ் சீசனில் ராபர்ட் மாஸ்டர் பங்கேற்றார். இந்த நிலையில் இந்த சீசனில் சாண்டி மாஸ்டர் மீண்டும் பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முன்னாள் போட்டியாளரான ஜூலியும் இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு முறை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பும், இதுபோன்று போட்டியாளர்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாகும். அந்த பட்டியலில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள். எனவே இந்த முறை வெளியாகி உள்ள பிக்பாஸ் போட்டியாளர் உத்தேச பட்டியல் எந்தளவு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

click me!