ஆரம்பிக்கலாமா... அதகளமாக தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அலப்பறையான அப்டேட் வந்தாச்சு

Published : Aug 18, 2023, 03:20 PM IST
ஆரம்பிக்கலாமா... அதகளமாக தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அலப்பறையான அப்டேட் வந்தாச்சு

சுருக்கம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முக்கிய அப்டேட்டை விஜய் டிவி தற்போது வெளியிட்டு இருக்கிறது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸும் ஒன்று. கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதுவரை நடந்துமுடிந்த 6 சீசன்களில் இரண்டாவது சீசனில் மட்டும் ரித்விகா என்கிற பெண் போட்டியாளர் வெற்றிபெற்றார். எஞ்சியுள்ள 5 சீசன்களும் ஆண் போட்டியாளர்களே டைட்டில் வின்னர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக ஆட்கள் தேர்வு ஒருபக்கம் படு ஜோராக நடைபெற்று வர, மறுபுறம் எப்போடா தொடங்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஏற்கனவே பிக்பாஸ் புரோமோ ஷூட்டும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதால், அதற்கான அப்டேட்டுக்காக தான் அனைவரும் காத்திருந்தனர்.

இதையும் படியுங்கள்... விஜய் டிவியில் இருந்து வெளியேறியதற்கு அந்த பிரச்சனை தான் காரணம் - உண்மையை போட்டுடைத்த டிடி

இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அப்டேட் ஒருவழியாக வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி விஜய் டிவி-யில் சோசியல் மீடியா பக்கத்தில் போடப்பட்டுள்ள பதிவில், இன்று இரவு 7 மணி 7 நிமிடத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளது காத்திருக்கவும் என மொட்டை கட்டையாக குறிப்பிட்டு உள்ளனர்.

இருப்பினும் அதில் உள்ள 7 என்ற எண்ணை வைத்தே அது பிக்பாஸ் சீசன் 7 அப்டேட் தான் என ரசிகர்கள் ஈஸியாக கண்டுபிடித்துவிட்டனர். இன்று மாலை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்காக கமல் நடித்த புரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ரஜினியின் நண்பர்களிடம் வசமாக சிக்கிய விஜய்! தளபதிக்கு தலைவலியாக மாறிய சூப்பர்ஸ்டாரின் தோஸ்துகள்- சிக்கலில் Leo

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?