அக்னிதோஷம் பஞ்சபூதங்களால் ஏற்படும் தோஷங்களில் ஒன்றாகும். அக்னிதோஷம் எதனால் ஏற்படுகிறது மற்றும் அக்னிதோஷ நீங்குவதற்கு என்ன எளிய வழிகள் உண்டு என்பதைக் குறித்து இங்கு பார்க்கலாம்.
பொதுவாக ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் என பலவிதமான தோஷங்கள் இருப்பதாக ஜோதிட நிபுணர்கள் சொல்லி இருக்கின்றனர். அந்த லிஸ்ட்டில் அக்னி தோஷமும் உண்டு. இது பஞ்சபூதங்களால் ஏற்படும் தோஷங்களில் ஒன்றாகும். மேலும் ஜலதோஷம் கூட பஞ்சபூத தோஷங்களில் ஒன்று தான் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சொல்லப்போனால் பஞ்ச பூதங்களில் நான்கு பூதங்களால் ஏற்படும் தோஷங்கள் கூட போய் விடுமாம். ஆனால் இந்த அக்னியால் ஏற்படும் தோஷம் ஒரு மனிதனை பல வகையான நோய்களால் வாட்டி வதைத்து விடும். உதாரணமாக, அடிக்கடி காய்ச்சல், வயிற்று வலி மற்றும் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு ஆகியவை ஆகும்.
அக்னிதோஷம் ஏற்படுவது ஏன்?
நாம் அக்னிக்கு உரிய மரியாதையை கொடுக்க தவறியது, நெருப்பை அலட்சியம் செய்வது, நெருப்பை பழித்திருப்பது, கொழுந்து விட்டு எரியும் நெருப்பை கண்டு பயப்படுவது, குறிப்பாக நாம் கடந்து செல்லும் பாதையில் இடுகாட்டில் எரியும் பிணத்தை கண்டு பயப்படுவது. இவைகளே அக்னிதோஷம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆகும்.
இதையும் படிங்க: யாருக்கெல்லாம் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும்? அதற்கான பரிகாரம் என்ன?
அக்னி தோஷத்திற்கான பரிகாரம்:
ஒருவேளை நீங்கள் அக்னி தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது கொழுந்து விட்டு எரியும் நெருப்பை கண்டு பயந்திருந்தாலோ உடனே சிவனை மனதார நினைத்து தியானம் செய்யுங்கள். மேலும் அழகாக சுடர்விட்டு எரியும் தீபம் என்று அந்த நெருப்பை குறித்து நினைத்து கொள்ளுங்கள். அதன் பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதில் தர்ப்பை புல் மற்றும்
சிறிது திருநீரையும் போட்டு வைக்க வேண்டும்.
நீங்கள் தியானம் செய்து முடித்த பிறகு, அந்த பாத்திரத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். பின், "ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாராய நிவாராய" என்ற மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும். பின்னர், பாத்திரத்தில் உள்ள தண்ணீரை உங்கள் தலையிலும், வீட்டிலும் சிறிதளவு தெளித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றை நீங்கள் சிறிதளது குடிக்கலாம். தர்ப்பை புல் மற்றும் தண்ணீர் இரண்டுமே நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டது.
இதையும் படிங்க: வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் நிம்மதி சுத்தமா இருக்காது.. ஓயாமல் சண்டை சச்சரவு தான்.. இதை பண்ணி பாருங்க..
எனவே, அந்த தண்ணீரை நீங்கள் குடிப்பதினால் அக்னிதோஷத்தால் ஏற்பட்ட வயிற்று வலி மற்றும் உஷ்ண நோய்கள் நீங்கும். அதுபோல் இந்த நீரில் நீங்கள் சிறிது துளசி இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் துளசி துக்கத்தை நீக்கக் கூடியது. ஆகையால் துளசி இலையையும் அந்த தண்ணீரில் போட்டு குடித்தால் உங்கள் தோஷங்களுடன் உங்கள் பாவங்களும் நீங்கும்.