2024-ம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பெருந்தன்மையும் பிறருக்கு முடிந்த அளவில் எல்லாம் உதவ வேண்டும் என்ற பேருள்ளம் கொண்ட கன்னி ராசிக்காரர்களே உங்கள் பெருந்தன்மைக்கும் கௌரவத்திற்கும் குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று நாணயமாக நடந்து கொள்வீர்கள். தெய்வ பக்தியிலும், தெய்வ பலத்திலும் சிறந்து விளங்குவீர்கள்.
இந்த ஆண்டில் குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். வண்டி, வாகனம் யோகம் இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வருமானம் சிறப்பாக அமையும். மனதிலிருந்து குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும். உங்கள் திறமையால் புதிய நுட்பம் பிறக்கும். உங்களின் தர்க்க ஞானம் வெளிப்படும். அதே நேரம் கவனம் சிதறாமல் உழைக்காவிட்டால் சரியான இலக்கை எட்ட முடியாமல் போகலாம். பணி செய்யும் இடத்தில் சாதகமான சூழல் நிலவும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தொழில், வியாபாரத்தில் ஆரம்ப காலக்கட்டத்தி நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் சார்ந்த விஷங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் முதலீடு, முயற்சிகளில் நிச்சயமற்ற தன்மை இருக்கும். எனினும் புதன் பகவானின் முயற்சியால் நிலைமை படிப்படியாக சீராகும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டில் நிதிநிலையில் அதிர்ஷ்டம் ஏற்படும். பண வாய்ப்புகள் அதிகரிக்கும். பணம் தொடர்பான சிக்கல்கள் நீங்கும். மாணவர்களுக்கு நன்றாக படித்து நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். விடாமுயற்சி, அர்ப்பணிப்புன் படித்தால் நல்ல பலன்களை பெற முடியும்.
2024 புத்தாண்டு ராசி பலன் : அடுத்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சூரிய நமஸ்காரம், யோகா போன்றவற்றை செய்யலாம். உணவு விஷயத்தில் சுயக்கட்டுப்பாடு தேவை. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்காது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் தடை உண்டாகும். பெண்கள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை எட்டிய பெண்களுக்கு திருமணம் கைகூடும். கன்னி ராசிக்காரர்கள் அருகில் இருக்கும ஐயப்பன் கோயிலுக்கு சென்று வணங்குவது பாவங்களை போக்கும். பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.