2024 புத்தாண்டு ராசி பலன் : அடுத்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

Published : Dec 26, 2023, 05:21 PM IST
2024 புத்தாண்டு ராசி பலன் : அடுத்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

சுருக்கம்

2024-ம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த 2024-ம் ஆண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பண வரவு தாரளமாக வந்து கொண்டே இருக்கும். இந்த ஆண்டு எது நடந்தாலும் நன்மைக்கே என்ற உறுதிப்பாட்டுடன் உங்கள் செயல்பாடுகள் இருக்கும். உங்கள் முயற்சிகளை செம்மைப்படுத்தி காரியங்களை ஆற்றி வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் இருக்கும்.

உங்களின் அசாத்திய துணிச்சலால் பல செயற்கரிய சாதனைகளை செய்வீர்கள்.. கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றிவிடுவீர்கள்.. மற்றவர்கள் உங்களிடம் சொன்ன ரகசியத்தையும் காப்பாற்றுவீர்கள். இதனால் நண்பர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பணியாளர்களுக்கு மேலதிகரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு, பணி உயர்வு கிடைக்கும். மன நிம்மதி அளிக்கும் வகையில் மறைமுக வருமானங்கள் அதிகரிக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் பயனங்கள் ஏற்படும். வியாபாரம் செய்வோருக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

2024 புத்தாண்டு ராசி பலன் : கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

கணவன் மனைவி நிதானமாக பொறுமையாக இருப்பது நல்லது. வீண் விவாதங்களால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். அஷ்டம ராகு நடப்பதால் உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். செரிமான பிரச்சனைகள், உஷ்ணம் சம்மந்தமான நோய்கள் ஏற்படும். குடும்பத்தை நிர்வாகம் செய்யும் பெண்களுக்கு நெருங்கிய சொந்தங்கள் மூலம் பிரச்சனைகள் ஏற்படலாம். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்திருந்த பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமண வயதை அடைந்தவர்கள் நல்ல இடத்தில் வரன் அமையும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். 

உங்கள் 8-ம் வீட்டில் ராகு இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்கும் பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். குடும்ப ஸ்தானத்தில் கேது இருப்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. யாருக்கும் வாக்கு கொடுத்தும் மாட்டிக்கொள்ள வேண்டும். மாணவர்கள் நல்ல முறையில் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். எந்த தடங்கலும் இன்றி கல்வியில் வளர்ச்சி இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

Astrology: புத்தாண்டில் கை கோர்க்கும் சுப கிரகங்கள்.! தை மாதம் முதல் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்.!
18 வருடங்கள் கழித்து கும்ப ராசியில் அங்காரக யோகம்.! 3 ராசிகளின் வாழ்க்கையை புரட்டிப் போடப்போகுது.!