மிதுன ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு உழைப்பு கூடினாலும், அதற்கேற்ப வருமானமும் இரட்டிப்பாக உயரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. சிறப்பாக இருக்கும்.
என்ன வாழ்க்கை இது என்று சலிப்பு தட்டியவர்களுக்கு கூட அந்த நிலை மாறி நம்பிக்கை துளிர்விடும். கல்வி, வேலை ஆகியவற்றுக்காக வெளிநாடு செல்ல நேரிடும். கடினமான வேலைகளை எளிதில் செய்து முடித்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆண்டு முழுவதும் வருமானம் வந்து கொண்டே இருக்கும் என்றாலும் செலவுகளை குறைக்க முயற்சி செய்யுங்கள் அல்லது சுப செலவுகளாக மாற்றுங்கள். பணியில் இருப்பவர்கள் கவனக்குறைவுடன் இருக்ககூடாது. சக ஊழியர்கள் உங்கள் மீது புகார்களை அடுக்க தயாராக இருப்பார்கள். உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெறும் வகையிலும், புகார் எழ வாய்ப்பில்லாத வகையிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றுவது அவசியம்.
வியாபார்களுக்கு எதிரிகள் போட்டியாக இயங்கக்கூடும் என்பதால் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து அவர்களை உங்களுடனே தக்க வைத்துக்கொள்ளலாம். வேலையாட்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதன் மூலம் வீண் விரையங்களை தவிர்க்கலாம்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் பெற சாதகமான சூழல் இல்லை என்றாலும் கடுமையான முயற்சிகளை தொடர வேண்டியது அவசியம். வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் மிகவும் சிக்கனமாகவும், நிதானமாகவும் நடந்து கொள்வது முக்கியம். மாணவர்கள் விளையாட்டை குறைத்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் முயற்சிக்கு ஏற்றவாறு நன்மைகள் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவி இருக்கும்.
2024 புத்தாண்டு ராசி பலன் - ரிஷபம் : எதிர்பாராத பண வரவு இருக்கும்.. ஆனால் கவனம் தேவை..
மிதுன ராசிக்காரர்கள் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வீடு, சொத்து வாங்கும் போது நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் நிம்மதி இல்லை என்று தோன்றினாலும், பின்னர் அந்த நிலை மாறிவிடும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும், கோபத்தை குறைத்து, வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.