2024 புத்தாண்டு ராசி பலன் - ரிஷபம் : எதிர்பாராத பண வரவு இருக்கும்.. ஆனால் கவனம் தேவை..

Published : Dec 26, 2023, 10:09 AM ISTUpdated : Dec 26, 2023, 10:22 AM IST
2024 புத்தாண்டு ராசி பலன் - ரிஷபம் : எதிர்பாராத பண வரவு இருக்கும்.. ஆனால் கவனம் தேவை..

சுருக்கம்

2024 –ம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி மற்றும் செவ்வாயின் சஞ்சாரத்தால் இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்கலாம். பொருளாதார நிலை மேம்படும். தொழில், வியாபாரத்தில்  முன்னேற்றம் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாரத்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். எனினும் கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துவது நல்லது. அடுத்தவர்களை நம்பி ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

அதே போல் நீங்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள நல்லது. மேலும் அதிக முதலீடு செய்யும் விஷயங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். உங்களுக்கு லாப ஸ்தானத்தில் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது பயணிப்பதால் இந்த ஆண்டு பண வரவு அதிகமாகவே இருக்கும். எதிர்பாராத இடத்தில் கூட வருமானம் வரும்.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

2024-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகள், அலர்ஜி தொந்தரவால் மருத்துவ செலவுகள் அதிகமாகும். உணவில் கட்டுப்பாடு தேவை. வீண் விவாதங்களை குறைப்பதன் மூலம் தேவையற்ற சண்டைகளை தவிர்க்கலாம். கணவன், மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கணவனோ மனைவியோ தங்கள் துணையிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. சிறிய வார்த்தை கூட தீப்பொறியாக மாறி குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்கலாம்.

வருடத்தின் மீதம் உள்ள 9 மாதங்களில் பொன்னான காலமாகவே இருக்கும், திருமண தடை ஏற்பட்டவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

எதிரிகளின் சூழ்ச்சியால் நீங்கள் சிக்கி கொண்ட காலம் மாறி, எதிர்கள் உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்பார்கள். அதிகப்படியான கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு கடன் தொல்லை குறையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர் அல்லது நண்பர்களால் திடீர் திருப்பம் ஏற்படும். 

 

2024 புத்தாண்டு ராசி பலன் - மேஷம் : மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. இனி பொற்காலமே..

படிப்பில் மட்டும் மாணவர்களின் கவனம் இருக்க வேண்டும். மாணவர்கள் மிகுந்த கவனத்துடனும், சிரத்தையுடனும் படித்து இறுதி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம். உயர்கல்வி படிப்பவர்களுக்கு சில தடைகள் ஏற்படலாம். எனவே ரிஷப ராசிக்காரர்கள் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ளாமல் தெளிவான மனதுடன் இருப்பது நல்லது. 

PREV
click me!

Recommended Stories

Weekly Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் குருவின் பலத்தால் நினைத்தது அனைத்தும் நடக்கப்போகுது.!
Weekly Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் நடக்கப்போகும் மாற்றங்கள்.! தயாரா இருங்க.!