மேஷ ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
எடுத்த காரியத்தை முனைப்புடன் செயல்படுத்தும் வல்லமை கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆங்கில புத்தாண்டில் கடந்த சங்கடங்கள் விலகிவிடும், முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்க தொடங்குவீர்கள். இதுவரை நீங்கள் சந்தித்த அனைத்து பிரச்சனைகளும் பனி போல் விலகி விடும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும்.
இந்த ஆண்டு குரு மற்றும் சனியின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் நீங்கள் இழந்த அனைத்தும் உங்களுக்கு மீண்டும் கிடைக்கப்போகிறது. தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். தேவையற்ற பயம், சங்கடங்கள் நீங்கி நிம்மதியாக தூங்குவீர்கள். தெய்வ நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட இறை நம்பிக்கையில் ஆர்வம் ஏற்படும்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆன்ம பலம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் பெருகும். தொழில், உத்யோகத்திற்கா சிலருக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு இட மாற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கு உகந்த நேரம் இதுதான். வியாபரத்தை முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தவர்களுக்கு கூட இந்த ஆண்டு தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கை நழுவி போன பூர்வீக சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும். குடும்பத்தில் நிதி ஆதாயம், ஆதாரம் அதிகரிக்கும். எனினும் ஆண்டின் கடைசியில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
தடைபட்ட திருமணம் கூட ஏப்ரல் மாதத்திற்கு மேல் நடைபெறும். பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கி நிம்மதி அதிகரிக்கும். மழலை செல்வம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். புதிய பெண் தொழிலதிபர்கள் அதிகம் உருவாவார்கள். மாணவர்களின் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
சனி பெயர்ச்சி பலன்கள் : துலாம் முதல் மீனம் ராசி வரை.. யாருக்கெல்லாம் ராஜயோகம்? யாருக்கு பாதிப்பு?
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய்கள் நீங்கி உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். மிகப்பெரிய மாற்றத்தையும், அற்புத யோகத்தையும் வழங்கும் ஆண்டாக 2024 இருக்கும்.