சனி பெயர்ச்சி பலன்கள் : துலாம் முதல் மீனம் ராசி வரை.. யாருக்கெல்லாம் ராஜயோகம்? யாருக்கு பாதிப்பு?

By Ramya s  |  First Published Dec 22, 2023, 2:03 PM IST

இந்த சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


சனி பகவான் வாக்கிய பஞ்சானங்கப்படி, நேற்று மாலை 5.20 மணிக்கு (டிசம்பர் 23, 2023 - மார்கழி 4) மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். 2026 மார்ச் 6 வரை சனி பகவான் கும்ப ராசியில் தங்கி இருப்பார். இந்த சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம் :

Tap to resize

Latest Videos

சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட துலாம் ராசிக்காரர்ர்கள், இந்து சனி பெயர்ச்சி இதுவரை இருந்த கடினமான சூழல் மற்றும் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். உயர் பதவிகள் உங்களுக்கு தேடி வரும்.

பணியில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்குக்கேற்ற ஊதியம் கிடைக்கும். எனினும் சக ஊழியர்களுக்கு உங்கள் மீது பொறாமை ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடை ஏற்படலாம். வியாபாரிகள் நல்ல பொருளாதார வளர்ச்சியை காண்பார்கள். கொடுக்கல், வாங்கலில் உள்ள சிரமங்கள் குறையும். அரசியல் வாதிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலம் இடையூறு ஏற்படலாம். எனவே எவரிடமும் மனம் திறந்து பேசலாம். 

கலைத்துறையினருக்கு சுமாரான வாய்ப்புகளே கிடைக்கும். புகழை தக்கவைத்துக் கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெண்களுக்கு குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். கணவருடனான ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோரின் ஆதரவு நல்லவிதமாக இருக்கும்.. 

பரிகாரம் குலதெய்வத்தை வணங்கி வர நன்மைகள் உண்டாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விருச்சிகம்

செவ்வாயை ராசிநாதனாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். இது அர்த்தாஷ்டம சனி காலம். சனி பகவான் 4-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனி பகவான் உங்கள் ஆசை, குறிக்கோள்களை நிறைவேற்றுவார். பண வரவும், தன வரவும் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.  வீடு கார், புதிய ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீஅர்கள்.. ஆஞ்சநேய வழிபாடு அற்புதங்களை நிகழ்த்தும்.

பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய வசதிகள் உங்களை தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைக்க சற்று தாமதகாமகலாம். சக கலைஞர்களிடம் உங்கள் ரகசியங்களை சொல்ல வேண்டாம். பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்கு சென்று ஆன்மீக பலம் கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

பரிகாரம் : செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபட எதிர்ப்புகள் விலகும். தைரியம் கூடும்.

சனி பெயர்ச்சி பலன்கள்.. மேஷம் முதல் கன்னி வரை.. எந்த ராசிகளுக்கு சாதகம்? யாருக்கு பாதகம்..?

தனசு :

குரு பகவானை ராசி நாதனாகிய கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியால் 
நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கி படிப்படியாக முன்னேறுவீர்கள். தனுசு ராசிக்காரர்களை ஏழரை ஆண்டுகாலமாக ஆட்டிப்படைத்த ஏழரை சனி விலகப்போகிறது. இனி உங்களுக்கு பொன்னான காலம் தான். உங்கள் துன்பங்கள் துயரங்கள் நீங்கும் காலம் வந்துவிட்டது. நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் வசூலாகும். எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி, திருப்திகரமான பண வரவு இருக்கும். உயர் பதவிகள் தேடி வரும். தொழிலிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முழுமையான ராஜ யோகம் தேடி வரும். நீங்கள் புகழின் உச்சத்திற்கு செல்வீர்கள்.. 

பணியில் இருப்பவர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.. அரசியல் வாதிகளுக்கு பெயரும் புகழும் உயரும். தொண்டர்களின் ஆதரவுடன் கட்சியில் புதிய பொறுப்பை பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே இருக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் அதிகமாகவே கிடைக்கும். ஆன்மீக சுற்றுலா, இன்ப சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு உழைப்புக்கேற்ற மதிப்பெண்கள் கிடைக்கும் கடுமையாக உழைத்து படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள்.. 

பரிகாரம் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கஷ்டங்களை போகும்.

அடுத்த 2.5 ஆண்டுகள் சனி பகவான் பாடாய் படுத்தப்போகிறார்.. கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்..

மகரம் : 

சனி பகவானை ராசி நாதனாக கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலத்தில் உடல் சோர்வு அதிகரிக்கலாம். வருமானம் சீராகவே இருக்கும். ஆனால் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்ற வேண்டும். நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் நன்கு யோசித்த பின்னரே ஆக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் எதுவும் ஏற்படாது. பணியில் இருப்பவர்களுக்கு பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் சற்று பாராமகமாக நடந்து கொண்டாலும், தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள்.

அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலடத்தின் ஆதரவு கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பெயரும், புகழும் உயரும். பெண்கள் கணவரின் பாராட்டுகளை எளிதில் பெறுவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.. இல்லத்தில் நிம்மதி இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள் பெற்றோரின் ஆதரவு இருக்கும்.

பரிகாரம் : ஆஞ்சநேயரை வணங்கி வர வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். 

கும்பம்

சனி பகவானை ராசி நாதனாக கொண்ட கும்பர் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெர்யர்ச்சி ஜென்ம சனியாக அமையும். எனினும் சனி சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பொருளாதாரம் திருப்தி அளிக்கும் என்றாலும், பண பற்றாக்குறையால் இரவு பகலாக பாடுபட வேண்டியிருக்கும்.  மேலும் உங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த காலக்கட்டத்தில் மன குழப்பங்கள் அதிகரிக்கும். சிலருக்கு ஏமாற்றங்கள் வரலாம். பொல்லாதவர்களை விட்டு விலகி நல்லவர்களுடன் இணைந்து செயல்பட்டால் நல்லது நடக்கும். இல்லையேல் பல துன்பங்களை சந்திக்க நேரிடலாம்.

பணியில் இருப்பவர்கள் அனைத்து வேலைகளையும் குறுகிய காலத்தில் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நல்ல பலன்களை பெறுவார்கள். அரசியல்வாதிகளை தேடி தேடி புதிய பதவிகள் வரும். சில காரியங்களில் தடை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்க கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் உங்கள் சுய கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாது. பெண்களுக்கு குடும்பத்தில் அனுகூலமான சூழல் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து ஆசிரியர்களின் பாராட்டை பெறுவீர்கள். 

பரிகாரம் :

விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும்.

மீனம் : 

குரு பகவானை ராசி நாதனாக கொண்ட மீன ராசி அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியில் தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும். உங்களை விட்டு விலகி இருந்த தாய் வழி உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள் அதிகமான பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வும் இருக்கும். மேலதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். 

வியாபாரிகள் கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் குளறுபடிகளை தவிர்க்கலாம். அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலடத்தின் ஆதரவு கணிசமாக உயரும். எனினும் தொண்டர்கள் பாராமுகமாகவே இருப்பார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அனைத்து வேலைகளும் சுமூகமாக முடியும். பெண்கள், குடும்பத்தினரிம் விட்டுக்கொடுத்து, அனுசரித்து செல்லவும். மாணவர்கள் படிப்பில் வரும் இடையூறுகளை சமாளிக்க ஆற்றலை பெறுவார்கள். தெளிவான மனதுடன் படித்து நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

பரிகாரம் : முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

click me!