சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
9 கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கப்படும் ஒரே கிரகம் சனி பகவான் மட்டும் தான். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீமையையும் சனி பகவான் வழங்குகிறார். இதனா சனிப் பெயர்ச்சி தனது இயக்கத்தை மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் வாக்கிய பஞ்சானங்கப்படி, நேற்று மாலை 5.20 மணிக்கு (டிசம்பர் 23, 2023 - மார்கழி 4) மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். 2026 மார்ச் 6 வரை சனி பகவான் கும்ப ராசியில் தங்கி இருப்பார். இந்த சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம் :
செவ்வாயை ராசி நாதனாக கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு இது லாப சனி காலமாகும். இந்த காலக்கட்டத்தில் செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். நீங்கள் தொட்டதெல்லாம் இனி பொன்னாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.
பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பண வரவும், பதவி உயர்வும் இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவாலும், நட்பாலும் அலுவலகத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். எனினும் அதை முழுமையாக அனுபவிக்க முடியாத அளவுக்கு சில குறுக்கீடுகள் வரலாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
பெண்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும் காலக்கட்டம். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.மாணவர்கள் உற்சாக மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவார்கள். விளையாட்டிலும் வெற்றியை பெறுவார்கள்.
பரிகாரம் : செவ்வாய் கிழமை தோறும் முருகனை வழிபட்டு வந்தால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ரிஷபம் :
சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் பல நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பழைய கடன்கள் கூட வசூலாகும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் சீராக இருக்கும். நீங்கள் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகள் ஆதரவு கிடைத்தாலும், மரியாதைக்குரிய தொலைவில் இருந்து பழகுவது நல்லது.
வியாபாரிகளுக்கு போட்டி பொறாமை அதிகரிக்கும். எனினும் பொறுமையுடன் செயல்பட்டு அதை சமாளிப்பீர்கள்.. உங்கள் சமயோஜித புத்தியால் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளின் கௌரவம் உயரும். தங்கள் கட்சி தொண்டர்கள், நெருங்கியவர்களுக்கு மிகப்பெரிய உதவிகளை செய்து பாராட்டுக்களை பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு படிப்படியான வளர்ச்சி கிடைக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பெண்களுக்கு குடும்பத்தில் மன நிம்மதி நிலவும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு ஞாபக சக்தியும், அறிவாற்றலும் அதிகரிக்கும். படிப்பில் வெற்றி கிடைக்கும். பெற்றோரின் ஆதரவுடன் எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
பரிகாரம் : வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வர நன்மை கிடைக்கும்
மிதுனம் :
புதனை ராசிநாதனாக கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் மனதில் தெளிவு உண்டாகும். எனவே மனதை ஒருநிலைப்படுத்தி உழைக்க தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடந்து கொள்வார்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். விட்டுக்கொடுத்து சென்று வழக்குகளை முடித்துக்கொள்ளவும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்வார்கள். உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியை நோக்கி செல்லும். பொறுப்புகள் கூடும். எனினும் பிறரிடம் பேசும் போது நிதானம் தேவை. பெண்களுக்கு கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் அனுசரித்து செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும்.
மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம் : புதன்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று 6 முறை வலம் வர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்
சந்திரனை ராசிநாதனாக கொண்ட கடக ராசிக்கார்களுக்கு, இந்த சனி பெயர்ச்சியினால் பிரச்சனைகள் உருவாகலாம். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்த சனி பகவான் இன்று முதல் 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் நுழைகிறார். இந்த காலக்கட்டத்தில் வீண் அலைச்சல் ஏற்படும். ஆரோக்கியத்தில் அடிக்கடி பிரச்சனை வரும் என்பதால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.. பொருளாதாரத்தில் பற்றாக்குறை அதிகரிக்கும், மன நிம்மதி இருக்காது. இது சோதனை காலமாக இருக்கும் என்பதால் எதையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. அஷ்டம சனிக் காலத்தில் அகலக்கால் வைக்கக்கூடாது என்பதால் புதிய தொழில் எதுவும் தொடங்க வேண்டாம். குடும்பத்திலும் பிரச்சனைகள் அதிகரிக்கும், யாருக்கேனும் வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற முடியாது.
அரசியல்வாதிகள் தங்கள் தொண்டர்களின் ஆதரவுடன் பல பாராட்டுக்குரிய செயல்களை செய்வார்கள். எதிரிகளின் தொல்லை குறையும். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால் தான் வெற்றி கிடைக்கும். பெண்கள் நன்றாக யோசித்த பின்னரே பிறரின் வார்த்தைகளை நம்ப வேண்டும். கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. மாணவர்கள் கடினமாக உழைத்து படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
பரிகாரம் : அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும்.
அடுத்த 2.5 ஆண்டுகள் சனி பகவான் பாடாய் படுத்தப்போகிறார்.. கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்..
சிம்மம் :
சூரியனை ராசி நாதனாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியால் பொருளாதார நிலை மேம்படும். பொதுநல காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமன தடை ஏற்பட்டவர்கள் விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் கடின உழைப்பை தாரக மந்திரமாக கொண்டு செயலாற்றினால் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் சாதக முடிவுகள் வந்தாலும், கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறைய தொடங்கும். தொண்டர்கள் உங்கள் பெருமைகளை புரிந்து கொள்வார்கள்.
கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். மாணவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள்.படிப்பிலும், விளையாட்டிலும் வெற்றி காண்பீர்கள்.
பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமை சிவன் கோயிலை 11 முறை வலம் வந்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி :
புதனை ராசிநாதனாக கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியால் செல்வாக்கும், செல்வ செழிப்பும் அதிகரிக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 6-ம் வீட்டில் அமர்ந்து முழு ராஜ யோகத்தையும் தரப்போகிறார். சனி பகவான தனது சொந்த வீட்டிற்கு வருவதால் நோய்கள் தீரும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் வரும். புதிய தொழில் தொடங்கினால் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு விபரீத ராஜயோகங்களை தரப்போகிறது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து மகிழ்ச்சி நிலவும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
சனி பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம்.. இனி அமோக காலம் தான்...
பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு இருக்காது. எனினும் சக ஊழியர்களின் ஆதரவுடன் அதை சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் சிக்கல் இருக்காது. எனினும் கவனமாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்து செல்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். உங்கள் திறமைக்கேற்ற பணமும், பாராட்டும் கிடைக்கும். சக கலைஞர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை காண்பார்கள். கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பழைய தவறுகளை திருத்திக்கொண்டு புத்துணர்ச்சி உடன் பாடங்களை படிக்கவும்.
பரிகாரம் : அருகில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபட பாவங்கள் நீங்கும்.