சனி பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம்.. இனி அமோக காலம் தான்...

By Ramya s  |  First Published Dec 20, 2023, 2:22 PM IST

இந்த சனி பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் சில ராசிகள் இந்த பெயர்ச்சியால் விபரீத ராஜயோகங்களை பெறப்போகின்றது.


சனி பகவான் இன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்கிறார். நவகிரகங்களில் மெதுவாக நகரும் சனி கிரகம் ஒரு ராசியில் 2.5 ஆண்டுகள் தங்கும். எனவே அடுத்த 2.5 ஆண்டுகள் அவர் கும்ப ராசியில் தான் தங்கி இருப்பார். இந்த சனி பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் சில ராசிகள் இந்த பெயர்ச்சியால் விபரீத ராஜயோகங்களை பெறப்போகின்றது. அவை எந்தெந்த ராசி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம் :

Tap to resize

Latest Videos

மேஷ ராசிக்காரர்களுக்கு இது லாப சனி காலமாகும். இந்த காலக்கட்டத்தில் செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். நீங்கள் தொட்டதெல்லாம் இனி பொன்னாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கன்னி : 

கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 6-ம் வீட்டில் அமர்ந்து முழு ராஜ யோகத்தையும் தரப்போகிறார். சனி பகவான தனது சொந்த வீட்டிற்கு வருவதால் நோய்கள் தீரும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் வரும். புதிய தொழில் தொடங்கினால் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு விபரீத ராஜயோகங்களை தரப்போகிறது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து மகிழ்ச்சி நிலவும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். 

துலாம் :

கஷ்டங்களையும், நோய்களையும் அனுபவித்து வந்த துலாம் ராசிக்காரர்களுக்கு இனி நல்லதே நடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமண தடை நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி பல நன்மைகளையும், யோகங்களையும் தரப்போகிறது. தொழில் வளர்ச்சி பெறும். பணவரவு அதிகமாகவே இருக்கும். இல்லத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டில் ஒற்றுமை, நிம்மதி அதிகரிக்கும். 

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்கள் இது அர்த்தாஷ்டம சனி காலம். சனி பகவான் 4-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனி பகவான் உங்கள் ஆசை, குறிக்கோள்களை நிறைவேற்றுவார். பண வரவும், தன வரவும் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.  வீடு கார், புதிய ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீஅர்கள்.. ஆஞ்சநேய வழிபாடு அற்புதங்களை நிகழ்த்தும்.

அடுத்த 2.5 ஆண்டுகள் சனி பகவான் பாடாய் படுத்தப்போகிறார்.. கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்..

தனுசு :

தனுசு ராசிக்காரர்களை ஏழரை ஆண்டுகாலமாக ஆட்டிப்படைத்த ஏழரை சனி விலகப்போகிறது. இனி உங்களுக்கு பொன்னான காலம் தான். உங்கள் துன்பங்கள் துயரங்கள் நீங்கும் காலம் வந்துவிட்டது. நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் வசூலாகும். எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி, திருப்திகரமான பண வரவு இருக்கும். உயர் பதவிகள் தேடி வரும். தொழிலிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முழுமையான ராஜ யோகம் தேடி வரும். நீங்கள் புகழின் உச்சத்திற்கு செல்வீர்கள்.. 

click me!