அடுத்த 2.5 ஆண்டுகள் சனி பகவான் பாடாய் படுத்தப்போகிறார்.. கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்..

By Ramya s  |  First Published Dec 20, 2023, 11:10 AM IST

2026 மார்ச் 6 வரை சனி பகவான் கும்ப ராசியில் தங்கி இருப்பார். இந்த சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


9 கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கப்படும் ஒரே கிரகம் சனி பகவான் மட்டும் தான். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீமையையும் சனி பகவான் வழங்குகிறார். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. எனவே சனிப் பெயர்ச்சி தனது இயக்கத்தை மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் வாக்கிய பஞ்சானங்கப்படி, இன்று, மாலை 5.20 மணிக்கு (டிசம்பர் 23, 2023 - மார்கழி 4) மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 2026 மார்ச் 6 வரை சனி பகவான் கும்ப ராசியில் தங்கி இருப்பார். இந்த சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி 2023 : கும்பம் - ஜென்ம சனி

Tap to resize

Latest Videos

இந்த சனிப்பெர்யர்ச்சி கும்ப ராசிக்கு ஜென்ம சனியாக அமையும். எனினும் சனி சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பொருளாதாரம் திருப்தி அளிக்கும் என்றாலும், பண பற்றாக்குறையால் இரவு பகலாக பாடுபட வேண்டியிருக்கும்.  மேலும் உங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த காலக்கட்டத்தில் மன குழப்பங்கள் அதிகரிக்கும். சிலருக்கு ஏமாற்றங்கள் வரலாம். பொல்லாதவர்களை விட்டு விலகி நல்லவர்களுடன் இணைந்து செயல்பட்டால் நல்லது நடக்கும். இல்லையேல் பல துன்பங்களை சந்திக்க நேரிடலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த காலக்கட்டத்தில் முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. ஏற்றுமதி, வணிகம், பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைப்பளு, மனக்குழப்பம், நிம்மதியின்மை அதிகரிக்கும். எனினும் விரதங்களும் வழிபாடுகளும் நன்மையை சேர்க்கும். தேனி மாவட்டம், சின்னமன்னூர் அருகே இருக்கும் குச்சனூரில் சுயம்புவாக அருள்பாலிக்கும் சனீஸ்வரரரை வழிபட்டால் சிறப்பான நன்மைகளை பெறலாம். மேலும் தினமும், சனீஸ்வரர், ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் கிடைக்கும்.

சனி பெயர்ச்சி 2023 : கும்பம் - விரையச் சனி

இது உங்கள் ராசிக்கு ஏழரை சனியின் தொடக்கத்தை குறிக்கிறது. இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருந்த சனிபகவான் இன்று 12-ம் இடத்திற்கு வருகிறார். 12-ம் வீடு என்பது மோட்சம் விரயம் இரண்டையும் குறிக்கிறது. எனவே உங்களுக்கு சனி பகவான் நன்மை, தீமைகளை சேர்த்தே வழங்குவார். எனினும் இந்த காலக்கட்டத்தில் அமைதியாக செயல்படுவது நல்லது. யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். தொழிலில் தேக்க நிலையில், மனக்குழப்பத்துடன் செயல்படும் சூழல் இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரிவு, பொருளாதார நெருக்கடி, எதிரிகளால் இடையூறு ஏற்படும். மருத்துவ செலவு, வாகன பழுதுபார்ப்பு செலவு போன்ற திடீர் செலவுகள் அதிகரிக்கலாம். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை, கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் விரய செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அதை சுப செலவுகளாக மாற்றலாம்.. வாலாஜாப்பேட்டையில் உள்ள பாதாள சொர்ண சனீஸ்வரை வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்...

சனி பெயர்ச்சி 2023 : கடகம்- அஷ்டம சனி

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்த சனி பகவான் இன்று முதல் 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் நுழைகிறார். இந்த காலக்கட்டத்தில் வீண் அலைச்சல் ஏற்படும். ஆரோக்கியத்தில் அடிக்கடி பிரச்சனை வரும் என்பதால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.. பொருளாதாரத்தில் பற்றாக்குறை அதிகரிக்கும், மன நிம்மதி இருக்காது. இது சோதனை காலமாக இருக்கும் என்பதால் எதையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. அஷ்டம சனிக் காலத்தில் அகலக்கால் வைக்கக்கூடாது என்பதால் புதிய தொழில் எதுவும் தொடங்க வேண்டாம். குடும்பத்திலும் பிரச்சனைகள் அதிகரிக்கும், யாருக்கேனும் வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற முடியாது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பெரிச்சிக் கோயிலில் வீற்றிருக்கும் வன்னிமரத்தடி சனிஸ்வரரை வழிபட்டால் வாழ்க்கையில் நன்மை கிடைக்கும்.

click me!