கடக ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கடக ராசிக்கு 2024-ம் ஆண்டு தொடங்கும் போது, கிரகங்களின் அமைப்புப்படி சனி 8-ம் வீட்டில் அஷ்டம சனியாக சஞ்சரிக்கிறார். அஷ்டம சனியின் தாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் குரு, ராகு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சாதகமான இடத்தில் சஞ்சரிக்கின்றன. எனவே இந்த ஆண்டு உங்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கலாம். சனி சஞ்சாரத்தை தவிர மற்ற கிரகங்கள் நிதி மற்றும் பொருளாதார ரீதியாக ஆதரவு அளிக்கும். தேவையில்லாத செலவுகள் குறையும். ஜூன் மாதத்திற்கு பிறகு பொருளாதார நிலை உயரும்..
ஆண்டின் தொடக்கத்தில் சில மாதங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். இதனால் வேலை மாறிவிடலாமா என்று கூட தோன்றும். குரு தற்போது உங்கள் 10-ம் வீட்டில் இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீற்களோ அதன் பலன் உங்களுக்கு குரு 11-ம் இடத்திற்கு பெயரும் போது கிடைக்கும். இதனால் ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களின் பொருளாதார நிலை மாறும்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அஷ்டம் சனி காலக்கட்டத்தில் கணவன் மனைவி இடையே சில பிரச்சனைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் தேவையில்லாமல் ஏற்படும் வாக்குவாதங்கள் மிகப்பெரிய பிரச்சனைகளை உண்டாக்கலாம். எனவே கணவன் மனைவி யாராக இருந்தாலும் பொறுமையாகவும் விட்டுக்கொடுத்து சென்றால் பிரிவு ஏற்படாமல் பாதுகாக்கும்.
தேவையில்லாத மன உளைச்சல், தாமதம், தடைகளை கடக ராசிக்காரர்கள் சந்திக்க நேரிடும். ஆண்டின் முற்பகுதியில் கடினமான் சூழல் நிலவினாலும், பிற்பகுதி முன்னேற்றம் ஏற்படும்.
2024 புத்தாண்டு ராசி பலன் - மிதுனம் : இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது..
பணியில் இருப்பவர்களுக்கு மேலதரிகளுடன் சுமூகமான சூழல் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அஷ்டம் சனி என்பதால் பணத்தை முதலீடு செய்யும் கவனம் தேவை.. பண கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை.
தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவு விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. திருமணம் சார்ந்த பேச்சுவார்த்தைகளில் கவனமாக செயல்படுது நல்லது.