ஆவணி அவிட்டம் 2023:  தேதி மற்றும் சடங்குகளின் முக்கியத்துவம்..!!

By Kalai Selvi  |  First Published Aug 29, 2023, 4:55 PM IST

ஆவணி அவிட்ட விரதம் என்பது ஆவணி மாத பௌர்ணமியையொட்டி வருகிறது.


ஆவணி அவிட்ட விரதம் என்பது ஆவணி மாத பௌர்ணமியையொட்டி வருகிறது. இது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பிராமண சமூகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான சடங்கு ஆகும். குறிப்பாக இந்நாள் யஜுர்வேதி பிராமணர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தாண்டு  ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி மற்றும் காயத்திரி ஜபம் ஆகஸ்ட் 31ஆம் தேதியும் வருகிறது. மறுநாள் காயத்ரி ஜப சங்கல்பம் அனுசரிக்கப்படுகிறது. 

தென்னிந்தியாவின் பிற பகுதிகளில், அனுசரிப்பு உபாகர்மா என்று அழைக்கப்படுகிறது. யஜுர் வேதி உபாகர்மா ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதியும், ரிக்வேதி உபாகர்மா ஆகஸ்ட் 29ஆம் தேதியும் நடக்கிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: ஆவணி அவிட்டம் என்றாம் என்ன? துன்பம் விலகி வீட்டில் ஆனந்தம் பொங்க வைக்கும் வழிபாடு!!

இந்நாளில் காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் மற்றும் உபநயனம் செய்துக்கொண்ட ஒவ்வொரு பிராமணர்களும் ஆற்றங்கரை அல்லது குளக்கரைகளில் தங்களுடைய பழைய பூணூலை எடுத்துவிட்டு புது பூணூலை அணிந்துக்கொள்வர்கள். இச்சமயத்தில், கல்யாணம் ஆகாதவர் ஒரு பூணூல், கல்யாணம் ஆனவர் இரண்டு பூணூல், கல்யாணமாகி தந்தையை இழந்தவர் மூன்று பூணூல் அணிந்து கொள்வர்கள். 

ஆவணி என்பது தமிழ் மாதத்தின் பெயர். அவிட்டம் என்பது 27 நட்சத்திரங்களில் ஒன்றாகும். சிங்கம் என்பது மலையாள மாதம். விஷ்ணுவின் அவதாரமான ஹயக்ரீவர் இந்த நாளில் அசுரர்களால் திருடப்பட்ட வேதங்களை மீண்டும் கொண்டு வந்தார் என்று புராணம் கூறுகிறது.

இதையும் படிங்க:  ஆவணி அவிட்டம் 2023 : பூணூல் மாற்ற உகந்த நேரம் எது? அதன் முக்கியத்துவம் என்ன?

காயத்ரி ஜபம் சங்கல்பம் என்பது காயத்ரி மந்திரத்தை 1008 அல்லது 108 முறை உச்சரிப்பதற்காக குறிப்பிடப்படுகிறது. சடங்குகளைச் செய்யும் வரிசையும் முறையும் மடம் உறவைப் பொறுத்தது.

click me!