Aadi Month 2023 : ஆடி மாத சிறப்பு விரதங்கள்? இந்த விரதம் இருங்க ஐஸ்வர்யம் பெருகும்..ஆயுள் நீடிக்கும்..!!

By Kalai Selvi  |  First Published Aug 2, 2023, 2:29 PM IST

ஆடி மாதத்தில் கடைபிடிக்கப்படும் முக்கியமான விரதங்கள் என்ன என்று இங்கே பார்க்கலாம்.


ஆடி மாதத்தில் வேத பாராணயங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆடி மாதத்தில் பிராணயவாயு அதிகமாக  கிடைப்பதால், ஜீவ ஆதார சக்தி அதிகமாக உள்ள முக்கிய மாதமாகவும் உள்ளது. இதனால், ஆடி மாதம் சக்தி நிறைந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் இறைவனுக்கு விரதம் இருப்பது விஷேமானது. இம்மாதத்தில் விரதம் இருப்பதால் பல வகையான
நன்மைகள் கிடைக்கும்  என்பது ஐதீகம். எனவே, ஆடி மாதத்தில் முக்கியமான விரதங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

இதையும் படிங்க: Aadi Perukku Viratham : ஆடி பெருக்கு விரதம் இருங்க..செல்வ மழை பொழியும்...வேண்டிய அனைத்தும் நிறைவேறும்..!!

Tap to resize

Latest Videos

முக்கிய விரதங்கள்

  • ஆடி மாதத்தில் உணவு ஏதும் உண்ணாமலும், எவரிடமும் பேசாமல்  எந்நேரமும் இறைவனையே சிந்தித்து, விரதம் இருந்தால் உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
  • ஆடி தினத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளித்தால் மாங்கல்ய பலம் கூடும். 
  • அதுபோல் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடித்தால், கணவனின் ஆயுள் நீடிக்கும், குழந்தை வரம் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும், மேலும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கும்.
  • ஆடி மாதம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும். 
  • அதுபோல் ஆடி செவ்வாய்  கிழமைகளில் அம்பாளை வழிபட்டு மங்கல கௌரி விரதம் இருந்தால் விசேஷ பலன்கள் கைகூடும்.
  • ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கோபத்ம விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில், பசுவை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிட்டும். 
  • அதேபோலவே, ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு பால் வைத்து பூஜை செய்தால் நாகதோஷம் நீங்கும். மேலும் உங்கள் குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.
  • ஆடி மாதம் துளசி வழிபாடு செய்தால் உங்களுக்கு அரிதான பல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக ஆடி மாதம் வளர்பிறை நாளில் துளசியை வழிபட்டால் உங்களுக்கு ஐஸ்வர்யம் பெருகும் மற்றும் நீண்ட ஆயுள்  கிடைக்கும்.

இதையும் படிங்க: Aadi Perukku 2023 : நாளை ஆடி பதினெட்டாம் பெருக்கு... நல்ல நேரம் மற்றும் பலன்கள் இதோ..!!

click me!