Vastu Tips: வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் 7 குதிரைகள்; எங்கு வைக்கலாம்? வைக்கக் கூடாது?

By Dhanalakshmi G  |  First Published Aug 2, 2023, 1:36 PM IST

வாஸ்துவின்படி வீட்டில் சில மாற்றங்களை செய்தால் பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும், ஆற்றல் கிடைக்கும், உற்சாகம் மிகும், பணப் புழக்கம் அதிகரிக்கும் என்று கூறுவது உண்டு.


வாஸ்து என்பது நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுவதுடன் நம்புகிறவர்களுக்கு அது பாசிடிவ் பலனையே தரும். இதற்குக் காரணம் நமது எண்ணங்களையும் அதற்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்வதுதான். 

வாஸ்து நிவர்த்திக்கு ஏழு குதிரைகள் கொண்ட ஓவியத்தை வீட்டின் சுவற்றில் வரைவதும் உண்டு. சிலர் படத்தை வாங்கி ஒட்டிக் கொள்வதும் உண்டு. இது வளர்ச்சிக்கும் அதிர்ஷ்டத்திற்கும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஓடும் குதிரைகளின் படங்களை உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைப்பது உங்கள் வேலையை உச்சத்திற்கு கொண்டு செல்லும். 

Tap to resize

Latest Videos

குறிப்பாக ஏழு ஓடும் குதிரைகள் வணிக முன்னேற்றத்திற்கான சின்னமாக பார்க்கப்படுகிறது. அத்தகைய படத்தை வெட்டில் வைப்பதன் மூலம் ஒருவருக்கு தைரியம், புரிதல், பொறுமை, புத்திசாலித்தனம், ஆன்மீகம், அன்பு, மகிழ்ச்சி, அறிவு, தூய்மை போன்ற குணங்கள் கிடைக்கிறது.  ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடப்பதாக நம்பப்படுகிறது. எந்த திசையில் ஓடும் குதிரைகளின் படங்களை வைப்பதால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

தெற்கு திசை:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, 7 குதிரைகளின் ஓவியம் வாஸ்துவின் பல்வேறு கூறுகளுடன் தொடர்புடையது. வாஸ்து படி ஓடும் ஏழு குதிரைகளின் படத்தை தெற்கு திசையில் வைத்தால் அது வெற்றிக்கும் வெற்றிக்கும் காரணியாகிறது.

வடக்கு திசை:
வடக்கு திசையில் வைத்தால் வீட்டில் செழிப்பு உண்டாகும். பண வரவும் அதேதான். வியாபாரத்தில் லாபம் ஈட்டுவதற்காகக் கடையில் படம் இல்லாமல் செம்பு, பித்தளை அல்லது வெள்ளியால் ஆன ஓடும் குதிரையின் சிலையை வைத்துக் கொள்ளலாம்.


கிழக்கு திசை: வீட்டின் கிழக்கு திசையில் 7 குதிரைகளின் ஓவியம் வரைந்தால், உங்களின் தொழில் வளம் பெருகும், தடைபட்ட வேலைகள் வேகமெடுத்து முன்னேற உதவும்.

எந்த அறையில் வைக்கக் கூடாது:
ஓடும் குதிரைகள் வேகத்தின் அடையாளம். அதனால்தான் அவற்றை உங்கள் வீட்டின் வரவேற்பறையில், படிக்கும் அறையில், பணியிடத்தில் வைக்கலாம். ஆனால் படுக்கையறையில் வைக்கக்கூடாது.

குதிரை படம் நுழைவு வாயில் அருகே தொங்கவிடலமா?
* குதிரைகள் அனைத்தும் ஒரே லைனில் ஓட வேண்டும். 
* திறந்த வெளியில் குதிரைகள் ஓட வேண்டும். தண்ணீரில் ஓடக் கூடாது.
* வெள்ளை குதிரை, சிவப்பு நிறம் பின்னணியில் இருப்பதைப் போல பார்த்து வாங்க வேண்டும். இது செவ்வாய் கிரகத்தை குறிப்பதாக அமையும்.
* இது சுயமரியாதையை அதிகரிக்கும் 
* அலுவலகத்திற்கு என்றால் புளு நிறம் பின்னணியில் இருப்பதைப் போல பார்த்து வாங்கவும். இது சனி பகவானைக் குறிக்கும். 
* வீட்டின் வரவேற்பறையில் அல்லது சாப்பிடும் அறையில் குதிரை படத்தை தொங்க விடலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜன்னல் மற்றும் நுழைவு வாயில் அருகே தொங்க விடக்கூடாது.

இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்
ஓடும் குதிரைகளின் படங்களை நீங்கள் வரையும்போது, ​​அமைதியான வெளிப்பாட்டுடன் ஓடும் குதிரைகளைத் தேர்வு செய்ய வேண்டும். வீட்டிற்குள் ஆக்ரோஷமான குதிரை ஓவியத்தை வைக்க வேண்டாம். ஏழு வெள்ளைக் குதிரைகளை தேர்வு செய்யவும். இது வாஸ்துவை ஓட்டி செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும். அதே வேளையில், ஆக்ரோஷமான 7 குதிரைகளின் ஓவியம் வாஸ்து படி துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. வெள்ளை நிறம் அமைதியைக் குறிக்கிறது மற்றும் வெற்றி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

குதிரை முகம் எங்கு பார்த்து இருக்க வேண்டும்?
எப்போதும் ஒற்றைப்படை எண்களைக் கொண்ட குதிரை ஓவியங்களை தேர்ந்தெடுக்கவும். தனியாக ஓடும் குதிரை புகைப்படம் தேர்வு செய்யக் கூடாது. படத்தில் உள்ள குதிரைகள் முழுவதுமாக காட்டப்பட வேண்டும். குதிரையின் முகம் கட்டிடத்தின் உட்புறத்தை நோக்கி இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

click me!