ஆடிப்பெருக்கு என்பது நதியை வழிபடும் பண்டிகையாகும். ஆடி மாதம் 18 ஆம் நாள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை ஆடி பதினெட்டாம் பெருக்கு என கிராமப்புறங்களில் கூறப்படுகிறது.
மனித நாகரீகம் அனைத்தும் நதிக்கரையின் ஓரமாகவே தோன்றியதாகக் கூறப்படுகிறது. மேலும் நதிகள் அனைத்தும் பெண்தெய்வமாக பாவிக்கப்படடுவதால் மக்கள் அதனை வழிபடப்படுகின்றனர். அந்த வகையில், நதிகளை வழிப்பட்டு கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தான் “ஆடி பதினெட்டாம் பெருக்கு” ஆகும். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது நாளை ஆடி பெருக்கு ஆகும். இந்நாளில் பெண்கள் விரதமிருந்து இறைவனை வழிப்பட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
வழிபாடு முறை
இந்த சிறப்பு தினத்தில் பெண்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து தலைக்கு குளித்துவிட்டு, உணவு உண்ணாமல், மஞ்சள், குங்குமம், தாலி சரடு, கண்ணாடி போன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு நதிக்கரைக்கு செல்லுங்கள். பின் நதி கரை ஓரம் அமர்ந்து அம்மனை வணங்கி பொங்கல் வைத்து வழிபடுங்கள். பின் கரையோரம் இரண்டு தீபங்கள் ஏற்றி வைக்கவும். பின்னர் ஒரு தலை வாழையிலையில் பொங்கலையும் சித்ரா அன்னங்களையும் நிவேதனம் வைக்க வேண்டும். இதனை அடுத்து கொண்டு வந்த பொருட்களை வைத்து நதி அம்மனுக்கு தேங்காய் உடைத்து, தீப அர்ச்சனை செய்து வழிபடவும்.
இதையும் படிங்க: Aadi Perukku 2023 : நாளை ஆடி பதினெட்டாம் பெருக்கு... நல்ல நேரம் மற்றும் பலன்கள் இதோ..!!
இதனை அடுத்து, புதுமண பெண்கள் தங்களின் பழைய தாலி கயிற்றை கழற்றி, மஞ்சள் பூசப்பட்ட புது தாலிக்கயிற்றை தங்களது கணவன் மூலமாகவோ அல்லது வயதில் மூத்த சுமங்கலி பெண் மூலமாகவோ அணிந்து கொள்ளவும். இவற்றிற்கு பின் கடவுளுக்கு படைத்த படையல்களை குடும்பத்தாருக்கும், பிறருக்கும் வழங்கி உண்ணவும்.
வீட்டில் இருந்து வழிபடும் முறை
ஆடிப்பெருக்கு அன்று உங்களால் ஆறுகளில் வழிபட முடியவில்லை என்றாலோ அல்லது நீங்கள் வசிக்கும் இடத்தில் ஆறுகள் இல்லை என்றாலோ நீங்கள் வீட்டில் இருந்தவாறு வழிபடலாம். அதற்கு முதலில் நீங்கள் அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும். பின் வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து மாக்கோலம் இட வேண்டும். பின்னர் ஒரு பித்தளை சொம்பில் சிறிது மஞ்சளை போட்டு, அதில் சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றும் போது அனைத்து புண்ணிய நதிகளின் பெயர்களையும் உச்சரிக்க வேண்டும்.
இதையும் படிங்க: Aadi Perukku 2023: ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுவது ஏன்? அதன் சிறப்புகள் என்ன? மிஸ் பண்ணிடாதீங்க..!!
பின்பு அந்த நீரில் சில பூக்களை போட்டு, இரண்டு தீபம் ஏற்றி, தூபம் கொளுத்தி, சர்க்கரை பொங்கலை நிவேதனமாக வைத்து கற்பூர ஆரத்தி எடுத்து, நதிகள் அனைத்தையும் மனதார வணங்க வேண்டும். இதனை அடுத்து, பெண்கள் தங்கள் பழைய தாலிக்கயிற்றை கழற்றி, புதிய தாலிக்கயிற்றை மாற்றிக்கொள்ளலாம். இந்த பூஜைகளை பெண்கள் மனதார செய்தால், அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பல நன்மைகள் கிடைக்கும்.
பலன்கள்
ஆடி பெருக்கு அன்று லட்சுமி தேவி மிகவும் ஆனந்தமாய் இருப்பாள் என்பதால், அன்றைய தினம் தேவியிடம் எதை வேண்டினாலும் தருவாள் என்பது நம்பிக்கை. மேலும் இந்நாளில் வீட்டில் பூஜை செய்து லட்சுமி தேவியை வணங்கினால் வீட்டில் செல்வ வளம் பெருகும். எனவே, இந்நாளில் நீங்கள் இறைவனை வழிப்பட்டு வேண்டிய அனைத்தையும் பெற்று கொள்ளுங்கள்.