கோழிகளை பரவலாகத் தாக்கும் இந்த நோயைப் பற்றி நீங்கள் தெரிஞ்சுக்க வேண்டியது  அவசியம்...

You need to know about the disease that is spreading to chickens ...
You need to know about the disease that is spreading to chickens ...


இன்ஃபெக்சியஸ் கொரைசா

நோயின் தன்மை

** இது கோழிகளின் மேற்பகுதி சுவாச மண்டலத்தைத் தாக்கும் பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய ஒரு தீவிரமான தொற்று நோயாகும்.

** இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளை நீண்ட நாட்களாக சுவாச மண்டலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் நோயும் தாக்கும்.

** இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் மூகம் வீங்கி, மூக்கிலும் கண்ணிலும் சளி வடிதலும் காணப்படும்.

நோய்க்கான காரணங்கள்

** இந்நோய் ஹீமோஃபைலஸ் பாராகேலினேரம் எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

** வயது அதிகமான கோழிகள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

** நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகள் நோய் தாங்கிகளாகச் செயல்பட்டு இந்நோயினைப் பரப்புவதில் அதிகப் பங்கு வகிக்கின்றன.

** இந்நோய்க் கிருமியால் மாசடைந்த தண்ணீர், நோய் பாதிக்கப்பட்ட கோழிகளின் சளியால் மாசடைந்த தண்ணீர் போன்றவற்றாலும், காற்று வழியாக குறைந்த தொலைவுக்கு இந்நோய்க்கிருமி பரவும்.

** நேரடித் தொடர்பு முலமாகவும் இந்நோய் எளிதில் பரவும்.

** நீண்ட நாட்களாகக் கோழிகளைத் தாக்கும் நோய்கள், சிறு மூச்சுக்குழல் நோய், லேரிங்கோ டிரைக்கியைட்டிஸ் வைரஸ் தாக்கம், மைக்கோபிளாஸ்மா கேலிசெப்டிகம், ஈ.கோலை, பாஸ்சுரெல்லா பாக்டீரியாக்களின் தாக்கம் போன்றவையும் இந்நோயின் தாக்கத்தை அதிகரிக்கும் காரணிகளாகும்.

** இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் முட்டை உற்பத்தி 10% -40% வரை குறைந்து விடுவதால் அதிகப்படியான பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

நோய் அறிகுறிகள்

** ஆழ்கூளத் தரையில் வளர்க்கப்படும் கோழிப்பண்ணைகளில் இந்நோய் கோழிகளிடையே வேகமாகப் பரவி அதிக எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், குறைந்த அளவு இறப்பையும் ஏற்படுத்துகிறது. 

** இந்நோய் பாதிப்புக்குள்ளான கோழிகளில் தும்மல், மூக்கு, கண்கள் போன்றவற்றிலிருந்து சளி வடிதல், மேலும் முகம் வீங்கிக் காணப்படுதல்

** அதிகப்படியாக கண் சவ்வு அயற்சி ஏற்பட்டு தாடி வீங்கி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல்

** நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் தீவனம் மற்றும் தண்ணீர் எடுப்பது குறைந்து, முட்டை உற்பத்தியும் குறையும்.

நோய்த் தடுப்பு முறைகள்

கோழிப்பண்ணையில் நோய்க்கிருமிகளின் தாக்குதலின்றி கட்டுப்படுத்துவது நோயினைப் பண்ணையில் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறையாகும். இதற்கு பண்ணை சுகாதாரம் பேணுதல், கண்டிப்பான உயிர்ப்பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுதல், நோயற்ற ஆதாரங்களிலிருந்து கோழிக்குஞ்சுகளை வாங்குதல் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.

** இந்நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கோழிகள் நோய் தாங்கிகளாகச் செயல்படுவதால் அவற்றை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்.

** ஒரே சமயத்தில் கோழிகளை பண்ணைக்குள் விட்டு அவை வயதான பிறகு ஒரே சமயத்தில் அவற்றை பண்ணையினை விட்டு நீக்கி விட வேண்டும். இதனால் நோய் தாக்குதலை பண்ணையிலிருந்து முற்றிலும் நீக்கி விடலாம்.

** நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை செயலிழக்கச் செய்து, அவற்றுடன் பாக்டீரியாக்களை சிறிது சிறிதாக உடலில் வெளிவிடும் பொருட்களுடன் சேர்த்து தடுப்பூசி தயாரித்து கோழிகளுக்கு அளிப்பதால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

** நோய் தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் இரண்டு தவணைகளாக தடுப்பூசியினை அளிக்கலாம். ஒரு தடுப்பூசியில் 108எண்ணிக்கையிலான பாக்டிரியாக்கள் இருக்க வேண்டும். இந்தத் தடுப்பூசியினை கோழிகளின் 16ம் மற்றும் 20ம் வார வயதில் கோழிகளுக்கு அவற்றின் தோலுக்கடியில் கொடுக்க வேண்டும்.

** கோழிப்பண்ணைக் கொட்டகைகளை சுத்தம் செய்து கிருமிநீக்கம் செய்த ஒரு வாரம் கழித்து புதிதாக கோழிகளை பண்ணைக்குள் விட வேண்டும்.

** இந்நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதலற்ற ஒரு நாள் வயதடைந்த கோழிக் குஞ்சுகள் அல்லது வயதான கோழிகளை பண்ணையில் வளர்ப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios