You can get double yield by cultivating sponge in the yarn.

மஞ்சளில் ஊடுபயிராக செங்கீரை சாகுபடி

மஞ்சள் சாகுபடிக்கு உரம் வாங்க ஊடுபயிராக செங்கீரை சாகுபடி செய்து இரட்டை லாபம் பெறலாம்.

மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எண்ணத்தில், ஈரோடு மாவட்டம் முழுவதும் விவசாயிகள் அதிகளவு மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். கடந்தாண்டில் இருந்தே மஞ்சள் விலை திடீரென நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது.

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மஞ்சள் பயிருடன் ஊடுபயிரமாக பல்வேறு தானியங்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

வெள்ளோடு, கனகபுரம், டி. மேட்டுப்பாளையம் பகுதியில் மஞ்சளுடன் ஊடுபயிராக செங்கீரை சாகுபடி செய்துள்ளனர்.

மஞ்சள் பத்து மாத பயிர். மஞ்சள் விலை நிலையில்லாமல் சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக மஞ்சளுடன் ஊடுபயிராக செங்கீரை சாகுபடி செய்யலாம்.

செங்கீரை மூன்று மாத பயிர். வேப்பம் புண்ணாக்கு, காம்ப்ளக்ஸ் உரம், உப்பு ஆகியவை இடலாம். 30 நாளில் அறுவடையாகும் கீரையை ஈரோடு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு சென்று விற்று நல்ல வருவாய் பார்க்கலாம்.

மஞ்சளுடன் செங்கீரை சாகுபடி செய்வதால் நல்ல லாபம் கிடைப்பது உறுதி.