புளிச்சக்கீரை சாகுபடியை இப்படியும் செய்யலாம்…
நாம் தினமும் பயன்படுத்தும் கீரைகளில் சத்து மிகுந்த சுவையான கீரை புளிச்சக்கீரை. அதிகபடியான இரும்பு சத்து உடையது. கட்டில் கயிறு தயாரிக்க இதன் நார் அதிகம் பயன்படுத்தபடுகிறது
புளிச்சக்கீரையில் பாரம்பரிய ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. சிகப்பு மற்றும் வெள்ளை நிற பூக்களை உடைய ரகங்கள்.
ஓரளவு வறட்சி தாங்கி வளரும் தன்மை உடையது புளிச்சக்கீரை. புளிச்சக்கீரை அதிக அளவில் சாகுபடி செய்யும் ஒரே மாநிலம் ஆந்திரா.
80 நாட்களில் புளிச்சக்கீரையின் வளர்ச்சி முடிந்து அறுவடைக்கு தயாராகிவிடும். தமிழ் நாட்டில் காய்கறி தோட்டங்களில் வரப்பை சுற்றிலும் புளிச்சகீரை செடிகள் நடவு செய்யப்படுகிறது.
புளிச்சக்கீரையின் மீது காராமணி(தட்டைபயிறு) மற்றும் குறுகிய கால கொடி வகைகள் ஏற்றி விடப்படுகின்றன. புளிச்சக்கீரை பந்தல் போன்று அவற்றை தாங்கி நிற்கின்றன.
புளிச்சக்கீரையில் அதிகளவில் இரும்பு சத்து உள்ளதால் இரத்த சோகை நோய் குணமாகும். ஊறுகாய் போட்டு வைத்தால் பல மாதங்களுக்கு கெடாமல் இருக்கும்.
ஆறு அடி இடைவெளியில் இருவரிசையில் இவற்றை விதைத்து சற்று வளர்ந்த பின்னர் பாகல் கொடிகளை இவற்றின் மீது ஏற்றி விட்டால் பந்தல் முறை தேவைப்படாது. இதற்கு காசிலி கீரை என்ற பெயரும் உண்டு.